Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழ் சமூகத்தின் காவல் தெய்வம் அய்யனாரை பெருமைபடுத்திய மோடி அரசு!

தமிழ் சமூகத்தின் காவல் தெய்வம் அய்யனாரை  பெருமைபடுத்திய மோடி அரசு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Jan 2020 11:46 AM GMT


நாளை இந்தியா முழுவதும் 71வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வந்த பின்பு இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த குடியரசு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்தியா கேட்டில் இருந்து துவங்கும் நிகழ்வுகள் இம்முறை சாணக்கியபுரி பகுதியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் இருந்து துவங்க உள்ளது


குடியரசு தின அணிவகுப்பில் ஓவ்வொரு மாநிலத்தின் பெருமையை விளக்கும் கலை கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளை காட்சிபடுத்தும் வாகனங்கள் அணிவகுத்து செய்வது வழக்கம் நாளை நடைபெறும் விழாவில் தமிழ் நாட்டின் சார்பில் இடம்பெறும் அணிவகுப்பு வாகனத்தில் தமிழ் மக்களின் காவல் தெய்வம் அய்யனார் அணிவகுத்து குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அனைவருக்கு அருள்பாளிக்கிறரர் தமிழ் நாட்டு அய்யனார்


அய்யனார் வரலாற்றையும் அறிவோம்


தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனார் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.


மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது.


ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார். அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் {ஐயனார்} அய்யனார் அல்லது சாஸ்தா ஆவார்.


ஐயனார் மாசி மாதம்


தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தா அய்யனார் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்திருப்பார்.


மார்பில் பூணூல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். கீரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார்.


சந்தனம் பூசியிருப்பார். வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார். குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார்.


கண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள அய்யனார் நின்றபடி இருப்பார். அய்யனார் நிற்கும் கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பார்.


அய்யனாரின் பரிவார தெய்வங்களாக கருப்பணசாமி,வீரபத்திரர்,இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும்,செல்லியாய்,காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த (ஏழு) கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர். நாய் ஆடு  மயில் கோழி இவைகள்  அய்யனாருடன் இருக்கும்.          


சிவராத்திரி அன்று அய்யனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றையதினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர் எருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.


தைப்பொங்கலை அடுத்து வரும்  மஞ்சுவிரட்டுதிருவிழாவில் ஐயனார் கோயில் காளை மாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர். இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.


தமிழ் நாட்டை மோடி அரசு புறக்கணிப்பதாக கூறும் வம்பர்களுக்கு மோடி அரசு அய்யனாரின் பெருமையை கூறி செயலால் பதில் கூறுவதாக அமைந்துள்ளது.


Next Story