Top
undefined
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்! #RIP KOBE!

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்!  #RIP KOBE!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Jan 2020 10:16 AM GMT


அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் கலாபசாஸ் என மலைப் பகுதி உள்ளது. அங்கு ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட், அவரது மகள் கியன்னா உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். அந்தப் பகுதியில் வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






முதலில் பிரயன்ட் மற்றும் அவரது மகள் பற்றிய தகவல் தான் வெளியானது. பைலட் உள்ளிட்ட மற்ற 7 பேர் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.


41 வயது கோப் பிரயன்ட், அமெரிக்காவின் கூடைப்பந்து வீரர். அவர் தான் அந்த அணியின் மிக முக்கியமான வீரர். மேலும் உலகின் தலைசிறந்த கூடைப்பந்து வீரர்களில் ஒருவர்.


5 முறை என்.பி.ஏ சாம்பியன்ஷிப் பட்டத்தையும் மற்றும் ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக 20 ஆண்டுகளாக விளையாடியுள்ளார்.





அவரின் மரணம் கூடைப்பந்து ரசிகர்கள் இடையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


உலகத்தில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் மேலும் அவரின் ரசிகர்கள் அவருடைய மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.பலரும் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.





லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏராளமான ரசிகர்கள் திரண்டு அவருடைய உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Next Story