Top
undefined
Begin typing your search above and press return to search.

கிராமப் புற மக்களுக்கு கல்வி தொண்டு செய்து வரும் முஸ்லிம் பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது! தேடி வந்த விருதுக்காக ஆனந்தக் கண்ணீர்!

கிராமப் புற மக்களுக்கு கல்வி தொண்டு செய்து வரும் முஸ்லிம் பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது! தேடி வந்த விருதுக்காக ஆனந்தக் கண்ணீர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Jan 2020 12:02 PM GMT



குடியரசு தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, 2020 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதைப் பெற்ற 21 பேரின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டது. இந்த பட்டியலில் பிரபலமில்லாத சாதனை புரிந்தவர்களின் பெயர்கள் இருந்தன.


அவர்களில் ஒருவர் தட்சிணா கன்னடத்தைச் சேர்ந்த ஹரேகலா ஹஜப்பா என்பவர் ஆவார். இவர் சாதாரண ஒரு பழ வியாபாரி ஆவார். படிக்கும் வாய்ப்பை இழந்தவர். ஆனாலும் தான் இழந்த வாய்ப்பை தன் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது என்பதற்காக அரும்பாடு பட்டு ஒரு பள்ளிக் கூடத்தை உருவாக்கினார்.


மங்களூரு நகரத்தைச் சேர்ந்த ஹம்பன்கட்டா சந்தையில் ஒரு பழ விற்பனையாளரான இவருக்கு தற்போது வயது 68. இவரிடம் பழம் வாங்க வெளிநாட்டு பயணிகள் சிலர் வந்தனர். அவர்கள் கேட்ட கேள்விக்கு இவரால் ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியவில்லை. என்றாலும் கஷ்டப்பட்டு அவர்களை சமாளித்தார். தான் படிக்காததுதான் இதற்கு காரணம் என்பதை உணர்ந்ததால்தான் தான் இந்த கல்வி சாதனையை புரிந்ததாகக் கூறினார்.


தனது சொந்த ஊரான நியூபாடாபுவில் இடமில்லாததால் முன்பு சாதாரண மசூதி ஒன்றில் ஆங்கிலப் பள்ளியை தொடங்கிய இவர் தற்போது என் முயற்சிக்கு பலரது ஒத்துழைப்பு பெற்று ஆரம்பப் பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தற்போது மேல்நிலைப் பள்ளி என உயர்ந்து விட்டது என்றார். தனது ஊருக்கு கல்லூரி ஒன்றும் வரப்போவதாக கூறியுள்ளார்.


பழவியாபாரத்தின் மூலம் தான் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் பள்ளி பராமரிப்புக்கு செலவு செய்துள்ளதாக கூறினார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான குடிநீரை காய்ச்சி தரும் வேலை மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணியிலும் அவர் தொடர்ந்து ஈடுபடுவதாக அவரது மருமகன் நசீர் கூறினார்.


வகுப்பு அறைகளுக்கு இந்திய சாதனையாளர்களான கல்பனா சாவ்லா, ராணி அப்பாக்கா, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்(பணியாளர் அறை), சுவாமி விவேகானந்தா (ஆய்வகம்) என பெயர் வைத்துள்ளார்.


,2014 ஆம் ஆண்டு தனது பெயரை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகார்கள் முன்பு கூறினார். இடையில் என்ன ஆயிற்று என தெரியவில்லை. தற்போது தனக்கு பதமஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. முதலில் நான் நம்பவில்லை, நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் தன்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கும் நாட்டின் உயரிய விருதுகள் தேடி வருவது குறித்து ஆனந்தக் கண்ணீர் விடுத்தார்.


SOURCE: THE NEWS MINUTE


Next Story