Top
undefined
Begin typing your search above and press return to search.

அயோத்தி போல ஈரோட்டிலும் ஸ்ரீராமருக்கு மிகப்பெரிய கோவில்! பாரத ஹிந்து மகா சபை அறிவிப்பு!

அயோத்தி போல ஈரோட்டிலும் ஸ்ரீராமருக்கு மிகப்பெரிய கோவில்! பாரத ஹிந்து மகா சபை அறிவிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Jan 2020 6:05 AM GMT


அயோத்தியில் ஸ்ரீராமருக்கு பிரம்மாண்டமான கோவில் எழுப்பப்படவுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீராமரை அவமதித்துப் பேசியும், இழிவான செயல்களிலும் ஈடுபட்டுவந்த பெரியார் ஈ.வெ.ரா பிறந்த ஈரோட்டில் ஒரு மாபெரும் ஸ்ரீ ராமர் கோவில் கட்டப்படும் என அகில பாரத ஹிந்து மகா சபை தேசிய தலைவர் சுவாமி சக்ரபாணி மகராஜ் தெரிவித்தார்.


கோவையில் அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில்: ஆந்திராவில், ஹிந்து மதத்தை இழிவாகப் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறுவோர் மீது, கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர்.


நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், முனிவர்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள் ஆகியோரால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட ஹிந்து மதத்தையும், தர்ம சாஸ்திரங்களையும் கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் தமிழகத்தில் பேசி வரும் நிலையில் தமிழக அரசும் ஆந்திர அரசுபோல தடை விதிக்க வேண்டும் என்றார் .


இந்த நிலையில் ராமருக்கு செருப்பு மாலை அணிவித்த, ஈ.வெ.ரா., பிறந்த ஈரோட்டில், ஸ்ரீ ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்படும் திட்டம் உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் பணி வரும் மார்ச் மாதம் துவங்கும். அடுத்து ஈரோட்டிலும் இதற்கான பணிகள் தொடங்கும் என கூறினார்


Next Story