Top
undefined
Begin typing your search above and press return to search.

இலங்கையில் சிங்கள ஆண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது!

இலங்கையில் சிங்கள ஆண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Jan 2020 7:47 AM GMT



இலங்கையில் தெற்கு மாகாணம் மாத்தரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், வயிற்று வலி காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாடி, மீசையுடன், பெரிய வயிற்றுடன் வந்த அவரது அடையாள அட்டையில் ஆண் என்றுதான் குறிப்பிடப்பட்டு உள்ளது.


சிங்களரான அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நிறைமாத கர்ப்பமாக இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர் பிரசவ வலியால் துடிப்பதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து அவரை அங்குள்ள பிரசவ வார்டில் அனுமதித்தனர்.


அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஒருவாரம் தங்கி சிகிச்சை பெற்று வந்த அந்த நபர், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். தற்போது குழந்தையை அந்த மருத்துவமனை நிர்வாகம் பராமரித்து வருகிறது.


அந்த நபர் பிறக்கும்போது பெண்ணாக பிறந்து இன்னர். கார்மோன் சுரப்பின் காரணமாக ஆணாக மாறியுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர் தாடி, மீசை மற்றும் ஆண்களுக்கான மார்புடன் வளந்துள்ளார். இருந்ததாலும் அவருக்கு பெண்ணுறுப்பு, கர்ப்பபை போன்றவை இருந்ததால், அவரால் குழந்தை பெற முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த நபரால் குழந்தைக்கு பால் கொடுக்க இயலாது என்பதையும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


ஆண் குழந்தை பெற்ற அந்த சிங்கள நபர் குறித்த மற்ற தகவல்களை அந்த மருத்துவமனை நிர்வாகம் வெளியிட மறுத்து விட்டது.



Next Story