Top
undefined
Begin typing your search above and press return to search.

CAA-வுக்கு எதிராக போராட்டம் நடத்த, முஸ்லிம் அமைப்பிடம் பணம் வாங்கிய காங்கிரஸ்! ரூ.120 கோடி செலவிட்டது அம்பலம்!

CAA-வுக்கு எதிராக போராட்டம் நடத்த, முஸ்லிம் அமைப்பிடம் பணம் வாங்கிய காங்கிரஸ்! ரூ.120 கோடி செலவிட்டது அம்பலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jan 2020 11:38 AM GMT



நரேந்திர மோடி அரசு தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய முஸ்லிம் நாடுகளில் உள்ள பெரும்பான்மை முஸ்லிம்களால் கொடுமை படுத்தப்பட்டு, துரத்தியடிக்கப்பட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள, அந்த நாடுகளில் சிறுபான்மை மக்களான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படுகிறது.


இதனால் இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிம்களுக்கும் எந்தவிதமான பாதிப்புக்களும் இல்லை. இது பற்றி பாராளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டபோதே காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள் போன்ற எதிர்க்கட்சிகளுக்கு இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.


அப்படி இருந்தும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா முழுவதுக்கும் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் கலவரங்களை தூண்டி விட்டன காங்கிரசும், திமுகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்.


இவர்களின் இந்த பித்தலாட்ட கலவரத்திற்கு பின்னால் முஸ்லிம் அமைப்பு 120 கோடி ரூபாயை செலவழித்து உள்ளது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முஸ்லிம் அமைப்புகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு காங்கிரசும், எதிர்க்கட்சிகளும் கலவரத்தை தூண்டி விட்டு உள்ளன என்ற கேவலமான உண்மை இப்போது தெரியவந்துள்ளது.


முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு, தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி கலவரத்தை ஏற்படுத்துவதற்காக மட்டும் 73 புதிய வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளது. அதன் மூலம் போராட்டத்தை தூண்டும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பணப் பட்டுவாடா செய்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.


அந்த வகையில் காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை பெற்று, அதனை தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் கலவரத்திற்கு செலவு செய்துள்ளார். இது போல இந்திரா சிங், அப்துல் சமது உள்ளிட்டவர்களும் பணம் வாங்கி உள்ளனர்.


இப்போது இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் மேலும் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story