Top
undefined
Begin typing your search above and press return to search.

பறக்கும் விமானத்தில் கூச்சலிட்ட இடதுசாரி : 6 மாதங்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்த இண்டிகோ நிறுவனம்

பறக்கும் விமானத்தில்  கூச்சலிட்ட இடதுசாரி : 6 மாதங்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்த இண்டிகோ நிறுவனம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jan 2020 5:04 PM GMT


சர்ச்சைக்குரிய இடதுசாரி குணால் கம்ரா, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) அன்று இண்டிகோ விமானத்தில் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியை பார்த்து கூச்சலிட்ட வீடியோவை வெளியிட்டார்.




https://twitter.com/kunalkamra88/status/1222109025812320257?s=19


வீடியோவில் அர்னாப் கோஸ்வாமியை ஒரு கோழை என்று பலமுறை கம்ரா அழைப்பதைக் கேட்கலாம். அர்னாபைத் தூண்டிவிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட கம்ரா, “அர்னாப் ஒரு கோழையா அல்லது தேசியவாதியா என்பதை பார்வையாளர்கள் இன்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் ... அர்னாப் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்... நீங்கள் ஒரு கோழையா அல்லது பத்திரிகையாளரா, யார் நீங்கள்?, நீங்கள் எனது பணிவுக்கு தகுதியற்றவர்" என்று கம்ரா கூறினார்.


வெறுப்பின் உச்சத்தில் இருந்த கம்ரா தனது கோபத்தை வெளிப்படுத்திய போது, ​​அர்னாப் தனது மடிக்கணினியில், தனது காதணிகளைக் வைத்துகொண்டு பொறுமையாக வேலை செய்வதைக் காணலாம். அர்னாபிடமிருந்து எந்தவொரு பதிலும் வராத நிலையில், தான் செய்த இந்த இடையூரை ரோஹித் வெமுலாவின் தாய்க்கு அர்ப்பணிப்பதாக கம்ரா கூறினார். கேபின் குழு உறுப்பினரால் எச்சரிக்கப்பட்ட பின்னர், தான் கூச்சல் இடுவதற்காக சிறைக்குச் செல்லத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.


கம்ரா தனது வீடியோவை வெளியிட்ட பிறகு, பல ட்விட்டர் வாசிகள் கம்ராவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அதை விமான நிறுவனம் ஏன் தடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். பயணிகளின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் கம்ராவை விமானத்தில் பறக்க தடை விதிக்க வேண்டும் என்றும் பலர் கோரினர்.




https://twitter.com/TrulyMonica/status/1222119615360192513?s=19




https://twitter.com/KyaUkhaadLega/status/1222126551820464129?s=19


இதன் பிறகு, கம்ரா, 6 மாதங்களுக்கு இண்டிகோ விமானங்களில் பறக்க தடை விதிக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.




https://twitter.com/IndiGo6E/status/1222177357261180933?s=19

Next Story