Top
undefined
Begin typing your search above and press return to search.

முஸ்லிம்கள் 4 தடவை திருமணம் செய்துகொள்ளும் முறை செல்லுமா? சுப்ரீம் கோர்டில் மனு: விசாரணை தொடங்குகிறது!

முஸ்லிம்கள் 4 தடவை திருமணம் செய்துகொள்ளும் முறை செல்லுமா? சுப்ரீம் கோர்டில் மனு: விசாரணை தொடங்குகிறது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jan 2020 4:52 AM GMT


பொதுவாக இந்திய முஸ்லிம்கள் பெரும்பாலானோர் சூழ்நிலைக்கேற்ப சரியான நெறிமுறைகளை கடை பிடித்தாலும், பலர் மிகவும் பழமைவாதிகளாக உள்ளனர். அவர்களில் சிலர் ஷரியத் சட்டம் எனக் கூறி பலதடவை திருமணம், முத்தலாக் மற்றும் பெண்களுக்கு மட்டும் ஏராளமான கட்டுப் பாடுகள் என உள்ளனர். இவர்களால் இஸ்லாமிய பெண்களின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது. எதிர்கால சந்ததிகளும் பழமையின் பிடியில் சிக்கிக் கொள்கின்றனர்.


இந்த நிலையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள், நான்கு முறை திருமணம் செய்து கொள்ளும் வழக்கம், அரசியல் சாசனப்படி செல்லுபடியாகுமா என்பதை ஆராய, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு மீதான விசாரணையில், தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு, அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.


முஸ்லிம்கள் மத வழக்கப்படி, ஒருவர் நான்கு முறை திருமணம் செய்து கொள்வதை, அவர்கள் மதம் அனுமதிக்கிறது. மேலும், விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண், தன் கணவருடன் மீண்டும் இணைந்து வாழ விரும்பினால், வேறொருவரை திருமணம் செய்ய வேண்டும்.பின், அவரை விவாகரத்து செய்துவிட்டு தான், மீண்டும் முதல் கணவருடன் இணைந்து வாழ வேண்டும் என, இஸ்லாமிய சட்டம் சொல்கிறது.


இதற்கு, 'நிக்ஹா ஹலாலா' என்று பெயர். இந்த இரண்டு நடை முறைகளும், அரசியல் சாசனபடி செல்லுபடியாகுமா என்பதை ஆராயுமாறு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த மனு மீதான விசாரணையில், தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என, அனைத்திந்திய முஸ்லிம்கள் சட்ட வாரியம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


Next Story