Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரோனா கொடூரம்: சீனாவில் இருந்து கேரளாக்காரர்களை மீட்க சிறப்பு விமானம் வேண்டும்! பினராயி விஜயன் பிரதமருக்கு கோரிக்கை!

கொரோனா கொடூரம்: சீனாவில் இருந்து கேரளாக்காரர்களை மீட்க சிறப்பு விமானம் வேண்டும்! பினராயி விஜயன் பிரதமருக்கு கோரிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jan 2020 7:05 AM GMT


சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தின் வுஹானில்தான் கொரோனா வைரசின் தாக்குதல் மிக அதிகமாக உள்ளது. இந்த நகரில்தான் அதிக அளவில் இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் கேரளாவை சேர்ந்தவர்கள்.


இவர்களில் 7 பேருக்கு வைரஸ் தாக்கிய நிலையில் நேற்று கேரளா வந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் பல இந்தியர்கள் உட்பட கேரளாக்காரர்கள் வைரசால் தாக்கப்பட்டு பலவீனமாக இருப்பதாக தெரியவந்தது.


எனவே அவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி இந்தியா கொண்டுவர சிறப்பு விமானம் அனுப்ப வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.


"வுஹானில் நில நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரிகிறது, அங்குள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் கேரள மாணவர்களின் நிலைமை மோசமாக உள்ளது பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.. வுஹான் அல்லது அருகிலுள்ள விமான நிலையத்திற்கு ஒரு சிறப்பு விமானத்தை அனுப்புவது குறித்து பரிசீலித்து, அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவது நல்லது என பினராயி விஜயன் கடிதத்தில் தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து மருத்துவக் குழு ஒன்றையும் அனுப்ப தயாராக உள்ளதாக கூறினார்.


வுஹானில் படிக்கும் மாணவர்கள் கூறியபடி “ வுஹான் பல்கலைக்கழகத்தில் மட்டும் 46 இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் சுமார் 20 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். வுஹானைத் தவிர, யிச்சாங் பகுதியில் இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாகவும்கூறினர்.


SOURCE:- THENEWSMINUTE


Next Story