Top
undefined
Begin typing your search above and press return to search.

சோனியாவுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது ஏன்? பா.ஜ.கவின் அதிரடி கேள்வியால் கண்டமானது காங்கிரஸ்!

சோனியாவுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது ஏன்? பா.ஜ.கவின் அதிரடி கேள்வியால் கண்டமானது காங்கிரஸ்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jan 2020 12:27 PM GMT



அட்டான் சமி என்பவர் பாகிஸ்தானை சேர்ந்த பியானோ இசைக் கலைஞர். இவர் 2001-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் வசித்து வருகிறார். அவர், 2016-ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தார்.


அட்னான் சாமி, இந்தியாவை தனது தாய் நாடாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாகவும், தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி இருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.


பியானோ கலைஞரான அட்டமி, இசை உலகிற்கு ஆற்றியுள்ள சிறந்த சேவையை கருத்தில் கொண்டு அட்டான் சமிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.


இதனை காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சனம் செய்து உள்ளன. இதனைத் தொடர்ந்து அதற்கு பதிலளித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறியதாவது:-


காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும், கம்யூனிஸ்டுகளும் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கின்ற முஸ்லிம்களை மட்டுமே ஆதரிக்கின்றன. மற்றவர்களை அவர்கள் ஆதரிப்பது இல்லை. அது ஏன் என்று புரியவில்லை.


பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள அட்டான் சமியின் தந்தை பாகிஸ்தான் விமானப்படையில் பணிபுரிந்தவர் என்பதனால் காங்கிரசும், எதிர்கட்சியினரும் மோடி அரசை குறை கூறுகின்றன.


காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தந்தைக்கும், இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த முசோலினிகும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல ஜெர்மனியை சேர்ந்த கிட்லருடனும் சோனியாவின் தந்தைக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் சொல்கிறார்கள்.


எனவே சோனியா காந்திக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது ஏன் என்று நாங்கள் கேட்கிறோம். இதற்கு பதில் சொல்லிவிட்டு அட்டான் சமி பற்றி காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் வியாக்கியானம் செய்யட்டும்.


அட்டான் சாமிக்கு, பத்மஸ்ரீ விருது பெறுவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என்பதனால் அவருக்கு அந்த விருது வழங்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டது போல் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கும் பழக்கம் தற்போது இல்லை. திறமையும், தகுதியும் உடையவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படுகின்றன.


இவ்வாறு அவர் கூறினார்.


Next Story