Top
undefined
Begin typing your search above and press return to search.

CAA-வால் பாதிப்பு என்று நிரூபித்தால் ரூ.1 கோடி! பா.ஜ.கவின் சவாலை ஏற்பாரா மு.க.ஸ்டாலின்?

CAA-வால் பாதிப்பு என்று நிரூபித்தால் ரூ.1 கோடி! பா.ஜ.கவின் சவாலை ஏற்பாரா மு.க.ஸ்டாலின்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jan 2020 5:05 AM GMT



நரேந்திர மோடி அரசு தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய முஸ்லிம் நாடுகளில் பெரும்பான்மை முஸ்லிம்களால் துன்புறுத்தப்பட்டு, துரத்தி அடிக்கப்பட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அந்த நாடுகளின் மத சிறுபான்மையினரான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், புத்தமதத்தினர், ஜைனர்கள் ஆகியோருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படுகிறது.


இந்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள எந்த ஒரு நபருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இருப்பினும் குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு துரத்தியடித்து விடுவார்கள் என்று திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி போராட்டங்களையும், கலவரங்களையும் தூண்டி வருகின்றன.


இந்த நிலையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் அவருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று பாஜக நிர்வாகி ஒருவர் சவால் விட்டு உள்ளார்.





நாமக்கல் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தங்கவேலு இந்த அதிரடி சவாலை வெளியிட்டுள்ளார். அவர் அந்த அறிவிப்பில், “இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தால் யாரேனும் ஒருவர் பாதிப்படைந்தார் என ஆதார பூர்வமாக நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.


இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்று ஒப்பாரி வைத்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜகவின் இந்த சவாலை ஏற்று பொது இடத்தில் நிரூபிப்பாரா என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.



Next Story