Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரானாவை காட்டி எங்க நாட்டை கொச்சப் படுத்தாதீங்க.. ப்ளீஸ்!! உலக நாடுகளிடம் சீனா கெஞ்சல்!

கொரானாவை காட்டி எங்க நாட்டை  கொச்சப் படுத்தாதீங்க.. ப்ளீஸ்!!  உலக நாடுகளிடம் சீனா கெஞ்சல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jan 2020 4:58 AM GMT


சீனா மூலம் பரவிவரும் கொரானா காய்ச்சல் குறித்த பரபரப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
சீனாவுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். அதேபோல அங்கிருந்து வருபவர்களைக் கண்டும் உலக மக்கள் பயந்துள்ளனர். என்றாலும் இந்தியாவில் அரசும், சுகாதாரத்துறை ஊழியர்களும் எதற்கும் பயப்படாமல் மருத்துவப்பணிகளை செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் அதிகம் வாழும் வோஹான் மாநிலத்தில் இதுவரை 106 பேர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளதாகவும், சீனாவில் உள்ள மற்ற நகரங்களில் வாழும் 2700 பேருக்கு இந்த நோய் பரவி தீவிர சிகிச்சை பெற்றுவருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. தலைநகர் பீகிங்கில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 50 வயதாகும் ஒருவர் நேற்று பலியானார்.


இந்த நிலையில் இந்தியா உட்பட பல நாடுகள் சீனாவில் குடியிருக்கும் தங்கள் நாட்டு நோயாளிகளை தனி விமானம் அனுப்பி அழைத்து வரும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.


இந்த நோயை காரணம் காட்டி சீனாவைப் பற்றியும் அங்குள்ள உணவகங்கள், உணவு கலாச்சாரம் குறித்தும் தவறான தகவல்களை பல நாடுகள் பரப்பி வருகின்றன. குறிப்பாக சீனர்கள் விஷப் பாம்புகளை தின்பதாக போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. அசுத்தமான கால்நடைகள் வளர்ப்பு எனவும் செய்திகள் பரப்பப்படுகின்றன, பத்திரிகைகளில் சீன கொடியின் மீது கொரானியஸ் வைரசின் படத்தை போட்டும், கார்டூன் வரைந்தும் மேலை நாடுகள் கிண்டலடித்து வருகின்றன. இது தொடர்பாக டேனிஷ் பத்திரிகை ஒன்றின் மீது சீனா அவதூறு வழக்கு போட்டுள்ளது.


இந்த நிலையில் கொரானா வைரஸ் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் அமைதி காக்க வேண்டும், மிகைப்படுத்தக்கூடாது என ஐ.நாவுக்கான சீன தூதர் ஷாங் ஜன் தெரிவித்துள்ளார். வைரஸை கட்டுப்படுத்தும் திறன் சீனாவுக்கு உள்ளது என்பதில் உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது எனவும், சீனாவை இது போன்ற நேரத்தில் தவறாக மதிப்பிட வேண்டாம் எனவும் உலக நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story