Top
undefined
Begin typing your search above and press return to search.

நான்காவது தொழில் துறை புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறுகிறது - இந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி!

நான்காவது தொழில் துறை புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறுகிறது - இந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி!

MuruganandhamBy : Muruganandham

  |  30 Jan 2020 2:40 AM GMT


நான்காவது தொழில் துறை புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறுகிறது என்று பேங்க் ஆப் அமெரிக்காவின் தலைமை செயல் அதிகாரி டி.மொய்னிஹான் கூறியுள்ளார்.


டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்திய பொருளாதாரம் குறித்து பேசியுள்ளார்.


அப்போது, "இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ளது. நாட்டில் நுகர்வும் அதிகரித்து வருகிறது. இந்திய மக்கள் தொகையில் இளம் வயதினரே அதிகம் உள்ளனர். சேவை பொருளாதார திறன் இந்தியர்களிடம் அதிகம் காணப்படுகிறது.


நான்காவது தொழில் துறை புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறுகிறது.இந்தியாவில் உள்ள எங்கள் குழுவினர், மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வணிகத்தை மிகவும் திறம்பட நிர்வகித்து வருகின்றனர்.


உலகப்பொருளாதாரம் மெதுவான வளர்ச்சி சூழலில் இருக்கிறது. இதன் தாக்கம் தான் உலக நாடுகளில் எதிரொலிக்கும்" என்று கூறியுள்ளார்.


Next Story