Top
undefined
Begin typing your search above and press return to search.

பெங்களூர் பெட்ரோல் பங்கில் பயங்கர தீ விபத்து!

பெங்களூர் பெட்ரோல் பங்கில் பயங்கர தீ விபத்து!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jan 2020 9:54 AM GMT


கர்நாடக மாநிலம் தலைநகரான பெங்களூரு மாநகரில் நேற்று இரவு பெட்ரோல் பங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பெங்களூரு, மடிவாளா காவல் நிலையம் அருகே பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்க் 24 மணி நேரமும் செயல்படக்கூடியது.



அதே போன்று தமிழகத்துக்கு வருகின்ற வாகனங்கள் அனைத்தும் இவ்வழியாகத்தான் கடந்து வரும்.
எப்போதும் மக்கள் கூட்டம் மற்றும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். இந்நிலையில், நேற்று இரவு ஊழியர்கள் பங்கில் வேலை பார்த்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
பின்னர் தீ மளமளவென கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதன் அருகாமையில் காவல் நிலையம், ஷாப்பிங் மால் உள்ளது.




https://www.youtube.com/watch?v=Qpu5B7vGTLM



தீ விபத்து ஏற்பட்டதையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்து, உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சேதம் விபரம் இதுவரை தெரியவில்லை. பணம் மற்றும் பெட்ரோல், டீசல் முற்றிலும் எரிந்தது குறிப்பிடத்தக்கது.



இந்த விபத்து தொடர்பாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story