Kathir News
Begin typing your search above and press return to search.

இப்படியும் படிக்கலாம் திருக்குறள்- 2

இப்படியும் படிக்கலாம் திருக்குறள்- 2

இப்படியும் படிக்கலாம் திருக்குறள்- 2

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Jan 2020 2:43 AM GMT


Nepotism
– உறவினர்/அன்புக்குரியவர் என்பதனால் ஒருவரை வேலையில் வைத்துக்கொள்ளலாமா?


திருக்குறள்
காட்டும் வழி


ஒருவரை பணிக்கு
தேர்வு செய்து அமர்த்துவதென்பது ஓர் நிறுவனத்தின் முதுகெலும்பு. சரியான தேர்வுகளே
வியாபாரத்தின் மற்றும் நிறுவனத்தின் உறுதிதன்மையை, அதன் தரத்தை பிரதிபலிக்கும் அம்சம்.


நிறுவனத்தின்
வளர்ச்சியும், மேன்மையும்
அதன் பணியாளர்களை சார்ந்தே இருக்கிறது. எத்தனை சிறிய நிறுவனத்தையும் உயரம் தொட
வைக்க அதன் பணியாளர்களால் இயலும் அதே சமயம் உச்சத்திலிருக்கும் நிறுவனங்கள் உடைந்து
சரியவும் காரணமாக சில பணியாளர்கள் இருக்க கூடும்.


இதன் தொடர்ச்சியாக
இன்றைய நவீன மேலாண்மையில் சொல்லப்படும் ஒரு வார்த்தை, NEPOTISM . அதாவது தமக்கு
வேண்டியவர்கள், உறவினர்கள், அன்புக்கு
உரியவர்கள் என்பதற்காக மட்டுமே அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை இவ்வாறு சொல்லாம்.


தகுதியற்ற சிலருக்கு
பொறுப்புகளும், அதிகாரமும்
வழங்கப்படும் அபாயம் இந்த முறைக்கு அதிகம் உண்டு. எனவே ஆள் தேர்வு செய்யும்
முறையில், திட்டமிடலில் எந்த மாதிரியான யுத்தியை
பயன்படுத்துகிறோம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.


உதாரணமாக, "ஒரு
நிறுவனத்தில் பல நாள் பணியாற்றிவந்த மூத்த பணியாளர் என்பதற்காக அவருடைய மகனுக்கும்
அதே நிறுவனத்தில் பணி தரப்படுகிறது. சில மாதங்களில் அவர் போதை பழக்கத்திற்க்கு
அடிமையானவர் என தெரியவருகிறது. வேலை நேரத்தில், வேலை
செய்யுமிடத்தில், நிறுவனத்தின் வாகனங்களை பயன்படுத்தும்
பொழுது என வேலை சூழலில் கூட மது அருந்துபவராக இருக்கிறார். இதனால் அவரை
பணியிலிருந்து நீக்குகிறார்கள்.


இந்த சம்பவத்தை
தாளமுடியதவராய் அந்த இளைஞரின் தந்தை தன் நெடுநாள் வேலையை ராஜினாமா செய்கிறார். அது
வளர்ந்து வரும் நிறுவனம் என்பதால் கணக்கியல் துறையின் தலைமையிடத்திலிருந்த அந்த
மூத்த பணியாளரின் இழப்பை ஈடு செய்ய நிறுவனம் சில மாதங்கள் திணறுகிறது"


அந்த சவாலிலிருந்து
மீள்கிற பொழுது அந்நிறுவனம் அதன் முதல் விதியாய் "anti - nepotism policy" என்கிற சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.


இது போன்ற பல
உதாரணங்கள் இன்று இருக்கின்ற சுழலில். அன்பு மட்டுமே ஒரு பணியாளருக்கான தேர்வாக
இருக்க முடியாது. தகுதியற்றவர் என அறிந்தும் நமக்கு வேண்டியவர் என்பதாலேயே ஒருவரை
பணியமர்த்துவது அறியாமை. ஒரு நிறுவனத்தின் ஆகப்பெரும் தோல்வியும் கூட.


இதை தான் அன்றே
சொன்னார்….நம் வள்ளுவர்..


காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.


நம் அன்புக்குரியவர்
என்பதை மட்டுமே அடிப்படை தகுதியாக கொண்டு. வேலைக்கும், பணிக்குமான எந்தவித
அடிப்படை அறிவும் இல்லாதவரை பணியமர்த்துவதென்பது அறியாமை மட்டுமல்ல, வேண்டாத விளைவுகள் அனைத்தையும் கொடுக்கும்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News