Top
undefined
Begin typing your search above and press return to search.

புதுவையில் பட்டப்பகலில் காங்கிரஸ் பிரமுகர் குண்டு வீசி படுகொலை!

புதுவையில் பட்டப்பகலில் காங்கிரஸ் பிரமுகர் குண்டு வீசி படுகொலை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Jan 2020 10:59 AM GMT



புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் அருகே உள்ள பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் சாம்பசிவம். காங்கிரஸ் பிரமுகரான இவர், அமைச்சர் கந்தசாமியின் தீவிரமான ஆதரவாளர்.


இவர் இன்று (31-ஆம் தேதி) காலை கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது, திடீரென மர்ம கும்பல் சிலர் இவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். நிலை தடுமாறி கீழே விழுந்த இவரை, அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது.


ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சாம்பசிவம், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.


இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதேப்போல அமைச்சர் கந்தசாமியின் உதவியாளராக இருந்த சாம்பசிவத்தின் மைத்துனர் வீரப்பன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று வெடிகுண்டு வீசி, வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.


சாம்பசிவம், பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது, புதுவையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.



Next Story