Top
undefined
Begin typing your search above and press return to search.

அடித்து, அவமானப்படுத்தி பள்ளியைவிட்டு துரத்தியதால், தூத்துக்குடி மாணவி தற்கொலை! திரும்பிக்கூட பார்க்காத கனிமொழி! அதிர்ச்சி பின்னணி!

அடித்து, அவமானப்படுத்தி பள்ளியைவிட்டு துரத்தியதால், தூத்துக்குடி மாணவி தற்கொலை! திரும்பிக்கூட பார்க்காத கனிமொழி! அதிர்ச்சி பின்னணி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Jan 2020 6:28 AM GMT



சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி பாத்திமா லத்தீப், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள், நடிகர் கமலஹாசன் போன்றவர்களெல்லாம் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள்.


ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை, வயது பெண் என்றும் பாராமல் அடித்து, அவமானப்படுத்தி, பள்ளியைவிட்டு துரத்தியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். ஆனால் இதுவரை ஒரு அரசியல்வாதிகூட சிறு கண்டனமும் தெரிவிக்கவில்லை, ஆறுதலும் தெரிவிக்க வில்லை.


தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் பேச்சியம்மாள். 15 வயதான பேச்சியம்மாள், பாளையங்கோட்டையில் உள்ள குழந்தை ஏசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.





இவர் அதிகமாக மதிப்பெண் பெறவில்லை என்றுகூறி மாற்றுச்சான்றிதழ் வாங்கி செல்லுமாறு பள்ளி நிர்வாகம் பேச்சியம்மாளின் ஏழை பெற்றோரை வற்புறுத்தி உள்ளது. இதன் பின்னரும் படிக்கும் ஆர்வத்தால் பள்ளிக்கு வந்த மாணவி பேச்சியம்மாளை வகுப்பு ஆரிசியை கேத்திரின், தமிழ் ஆசிரியை டெய்சி ஆகியோர், வயது பெண் என்றும் பாராமல் மற்ற மாணவிகள் முன்னிலையில் அடித்து, அவமானப்படுத்தி உள்ளனர். அதோடு வகுப்பில் பேச்சியம்மாளை இருந்து துரத்தியடித்து பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.


இந்த அவமானம் தாங்காமல் வீட்டுக்கு வந்த பேச்சியம்மாள், அழுதபடியே பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். அடித்து அவமானப்படுத்தி, பள்ளியில் தொடந்து படிக்கவிடாமல் துரத்தியது குறித்து அழுதபடியே கூறியுள்ளார். பெற்றோர் சமாதானப்படுத்தியும், அவர் சமாதானம் ஆகவில்லை.


பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பள்ளி சீருடையிலேயே அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.





மாணவி பேச்சியம்மாள் தற்கொலை செய்துகொண்டது தூத்துக்குடி மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இதனால் உறவினர்களும் கிராம வாசிகளும் குழந்தை ஏசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மாணவி பேச்சியம்மாள் சாவுக்கு காரணமான தமிழ் ஆசிரியை டெய்சியை கைது செய்ய வேண்டுமென்று அவர்கள் போராடினார்கள். அதோடு பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.


இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மாணவி பேச்சியம்மாள், ஆசிரியை அடித்து, அவமானப்படுத்தி, பள்ளியைவிட்டு துரத்தப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டபோது, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி எம்பியான கனிமொழி தூத்துக்குடியில்தான் முகாமிட்டிருந்தார். இருந்தாலும் இதுபற்றி கேள்விபட்ட பின்னரும் நேரில் சென்று பார்க்கவில்லை. கண்டனமும் தெரிவிக்கவில்லை. இரங்கலும்  தெரிவிக்கவில்லை.





ஆனால் சமீபத்தில் இவர் டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவிக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டதற்காக, சென்னையில் இருந்து விமானம் ஏறி டெல்லி சென்று நேரில் அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தார். அதேபோல சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவி பாத்திமா லத்தீபுக்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்தினார். ஆனால் மாணவி பேச்சியம்மாள், ஆசிரியர்களின் துன்புறுத்தினால் அவமானப்பட்டு, பள்ளியில் இருந்து துரத்தப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதை கண்டிக்ககூட கனிமொழிக்கு மனம் வரவில்லை.


இதற்கெல்லாம் ஒரே காரணம்தான், சென்னையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவி முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். தூத்துக்குடி மாணவி பேச்சியம்மாள், தமிழச்சியாக இருந்தாலும் இந்து மதத்தை சேர்ந்தவர். அதோடு மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் கேத்தரினா மற்றும் டெய்சி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள்.






வாழும் அன்னை தெரசா என்று கூறிக்கொள்ளும் கனிமொழியின் இந்த இந்து விரோத பாகுபாடு தூத்துக்குடி மாவட்ட இந்துக்களை கொதிப்படையச் செய்துள்ளது.


அதேபோல நீட் தேர்வில் வெற்றி பெறாததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்காக ரத்தக்கண்ணீர் வடித்த மு.க.ஸ்டாலின் கும்பல்களும், ஆசிரியைகள் அடித்து, அவமானப்படுத்தி, பள்ளியில் இருந்து துரத்தியதால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட மாணவி பேச்சியம்மாளுக்காக இரங்கல்கூட தெரிவிக்காதது நடுநிலையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


மேலும் இது ஒட்டுமொத்த இந்துக்களையும் கொதிப்படையச் செய்துள்ளது. இதன் பின்விளைவை திமுக வருகின்ற தேர்தல்களில் சந்திக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


Next Story