Top
undefined
Begin typing your search above and press return to search.

காணாமல் போன 11 நாட்கள் - 1752 ஆம் ஆண்டின் சுவரஸ்ய வரலாறு..!

காணாமல் போன 11 நாட்கள் - 1752 ஆம் ஆண்டின் சுவரஸ்ய வரலாறு..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Feb 2020 3:16 AM GMT



வரலாற்று சுவாரஸ்யம். 1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் காலெண்டரை
இணையத்தில் தேடி பாருங்கள். ஆச்சர்யகரமாக 11 நாட்கள் அதில் இல்லாமல்
இருப்பதை பார்ப்பீர்கள். .




Inline image 1


அதன்
காரணம், இந்த மாதத்தில் தான் 'இங்கிலாந்து' நாடு 'ரோமன் ஜூலியன்
காலெண்டர்' முறையிலிருந்து 'ஜார்ஜியன் காலெண்டர்' முறைக்கு மாற்றம்
பெற்றுள்ளனர். ஜூலியன் ஆண்டுகள் ஜார்ஜியின் ஆண்டுகளை விட 11 நாட்கள்
கூடுதலானவை.


அந்த 11 நாட்கள் வித்தியாசத்தை குறைக்க இந்த மாற்றத்தை
நடைமுறை படுத்திய மாதத்திலிருந்து 11 நாட்களை அந்த அரசு குறைத்துள்ளது.
இந்த மாற்றம் எந்த வகையிலும் அந்த நாட்டு மக்களை பாதிக்காமல் பார்த்தும்
கொண்டனர். பணியாளர்கள் அனைவருக்கு நாட்கள் குறைவாக இருந்தாலும் ஒரு மாத
முழு சம்பளம் வழங்கப்பட்டது. "paid leave" என்று பரவலாக அறியப்படுகிற
கருத்துருவாக்கம் முதல் முறையாக இதன்மூலம் நடைமுறைப்படுத்தபட்டது எனலாம்.


ரோமன்
ஜூலியன் காலெண்டர் முறைபடி ஏப்ரல் 1 ஆம் தேதியே புத்தாண்டாக
கடைப்பிடிக்கப்பட்டது. ஜார்ஜியன் காலென்டரிலோ ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டாக
அறியப்பட்டது. பழமையை விட முடியாத அந்நாட்டவர்கள் சிலர் ஏப்ரல் 1 ஆம்
தேதியையே புத்தாண்டாக கொண்டாடினர். இதை பலவிதமாக அரசு சொல்லியும் அவர்கள்
அந்த பழைய முறையை மாற்றவில்லை. எனவே அரசாணை ஒன்றை வெளியிட்டாரம் அரசர்
"ஏப்ரல் 1 புத்தாண்டாக கொண்டாடும் அனைவரும் முட்டாள்கள்" என்று.


இதனாலேயே ஏப்ரல் 1 முட்டாள் தினமாக மாறியிருக்கலாம் என்கிறது வரலாறு...!


(வரலாறு முக்கியம் அமைச்சரே... :-) :-))


Next Story