Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டாலினின் தேர்தல் சிறப்பு ஆலோசகர் “பார்ப்பனர்” பிரசாந்த் கிஷோரை, நிதிஷ் குமார் கட்சியைவிட்டு துரத்தியதன் பகீர் பின்னணி!

ஸ்டாலினின் தேர்தல் சிறப்பு ஆலோசகர் “பார்ப்பனர்” பிரசாந்த் கிஷோரை, நிதிஷ் குமார் கட்சியைவிட்டு துரத்தியதன் பகீர் பின்னணி!

ஸ்டாலினின் தேர்தல் சிறப்பு ஆலோசகர் “பார்ப்பனர்” பிரசாந்த் கிஷோரை,  நிதிஷ் குமார்  கட்சியைவிட்டு துரத்தியதன் பகீர் பின்னணி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Feb 2020 5:16 AM GMT



திமுக, காலம் காலமாக பிராமணர்களையும், இந்து மதத்தையும், இந்து மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தி வந்துள்ளது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் முடி சூட்டிக்கொண்ட பின்னரும், இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தி பேசி வருகின்றார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பனர்களையும் விட்டுவைக்கவில்லை அவர்.


அதேபோல தமிழர்கள் மத்தியில் வடநாட்டவர்கள் மீது வெறுப்புணர்வை விதைத்து வந்துள்ளனர். தமிழ்மொழி, தமிழினம் என்று பேசிப் பேசியே தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்து, தமிழர்களை மற்ற மாநில மக்களிடம் இருந்து பிரித்து வைப்பதையே கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.


மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று போராடி வருகிறார். அவர் முதல்வர் நாற்காலிக்காக இலவுகாத்த கிளியாக காத்து இருக்கிறார். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அவர் முதல்வர் ஆவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.


இதனால் யாரோ கொடுத்த போதனையால் பிரசாந்த் கிஷோர் என்ற வடநாட்டு பார்ப்பனரை தனது தேர்தல் சிறப்பு ஆலோசகராக ஏற்றுக்கொண்டுள்ளார். இப்போது அந்த பார்ப்பனர் என்ன சொல்கிறாரோ அதுதான் ஸ்டாலினுக்கு வேதவாக்காகி உள்ளது. ஒவ்வொரு விஷயமும், பிரசாந்த் கிஷோர் அறிவுரைப் படியே நடக்கிறது. அதாவது பார்ப்பனர் பிரசாந்த் கிஷோருக்கு ஸ்டாலின் அடிமையாகி விட்டார்.


திமுகவின் இந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத அதிரடி மாற்றங்கள் குறித்து, பகுத்தறிவை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து வைத்துள்ள கி.வீரமணி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. கருத்து தெரிவித்தால், அவரது பிழைப்பு நாறிவிடும் என்ற அச்சம்தான் காரணம்.


இந்த நிலையில் பிரசாந்த் கிஷோரின் செயல்பாடுகள் தேசவிரோதிகளுக்கு ஆதரவாக உள்ளதைத் தொடர்ந்து, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார் அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் பிரசாந்த் கிஷோரை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். நிதிஷ் குமாரின் இந்த தீர்க்கமான முடிவை தேசத்தை நேசிக்கும் அனைத்து தவைர்களும் வரவேற்று உள்ளனர்.


இந்தியாவின் ஆகச் சிறந்த அரசியல் நிபுணர் என்று நம்ப வைத்து வந்த பிரசாந்த் கிஷோரை, தனது கட்சியை விட்டு நிதிஷ் குமார் தூக்கி எறிந்தது, திமுகவின் தேர்தல் சிறப்பு ஆலோசகராக நியமித்து அவரிடம் சரணாகதி அடைந்த மு.க.ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் 360 கோடி ரூபாய் கொடுத்து, பிரசாந்த் கிஷோரிடம் தன்னை அடகு வைத்துள்ள ஸ்டாலினால் மெல்லவும் முடியாவில்லை, விழுங்கவும் முடியவில்லை, அவர் தவியாய் தவிக்கிறார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News