Kathir News
Begin typing your search above and press return to search.

கான்பிடன்ஸ் தரும் குட்டி கதை இரண்டு…!

கான்பிடன்ஸ் தரும் குட்டி கதை இரண்டு…!

கான்பிடன்ஸ் தரும் குட்டி கதை இரண்டு…!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Feb 2020 7:18 AM GMT


இரண்டு விறகு வெட்டிகள் காட்டுக்குள் சென்றனர். அன்று சுவரஸ்யமாக
அவர்களுக்குள் ஒரு போட்டி... அன்று ஒரு நாள் முழுவதிலும் யார் அதிகம் மரங்களை
வெட்டுகிறார்கள் என்று இதற்கு சாட்சியாக சில ஊர் மக்களும் இருந்தனர். முதலாமவன்
மரங்களை வேகமான வெட்ட ஆரம்பித்தான் அப்போது இரண்டாமவன் 10 நிமிடம் இடைவெளி
எடுத்து கொண்டதாக அவனுக்கு தகவல் வந்தது. இதை சாதகமாக பயன்படுத்தி முதலாமவன் அதி
வேகமாக அந்த பத்து நிமிடங்களில் வெட்ட ஆரம்பித்தான்.


ஒவ்வொறு இரண்டு மணி நேரத்திற்க்கும் ஒரு முறை அவன் 10 நிமிடம் ஓய்வு
எடுத்து கொள்வதாக முதலாமவனுக்கு தகவல் வந்தது. அந்த இடைவெளிகள் அனைத்திலும்
மரங்களை வெட்டி குவித்தான்.


இறுதியில் எப்படியும் வெற்றி நமக்குத்தான் என்பதில் உறுதியாக இருந்த
அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. நீ இடைவெளி எடுத்த போதெல்லாம் நான் மரங்களை
வெட்டி வீழ்த்தியபோதும் எப்படி உன்னால் என்னை விட அதிகமாக வெட்ட முடிந்தது என
முதலாமவன் கேட்டதற்கு, இரண்டாமவன்
சொன்னான்.... நான் பத்து நிமிட இடைவெளி அனைத்திலும் என் கோடாரியை பட்டை தீட்டி
கொண்டிருந்தேன் என்று.


தத்துவம்: கோடாரியோ, அறிவோ தீட்ட தீட்ட தாங்க மதிப்பு.


****************************


சுற்றுலா வந்திருந்த பயணி ஒருவர் காடுகளிலிருந்த யானையை கண்டு ரசித்தார்.
பெரும் பிரமாண்ட உரு படைத்த யானையின் காலில் சிறிய அடர்த்தியான கயிறு ஒன்று
கட்டப்பட்டிருந்ததை கண்டு யானை பாகனிடம் விசாரித்தார்.


இவ்வளவு பெரிய யானையை கட்டுப்படுத்த இந்த சிறு கயிறால் முடியுமா என்று.


அதற்கு யானை பாகன் சொன்னான், அது சிறு வயதாக இருந்த போது இந்த சிறிய கயிறு அதை கட்டுப்படுத்த போது
மானதாக இருந்தது. அதுவே பழகி பழகி பின்னாலில் அது வளர்ந்தபின்னும் இந்த கயிறை
தாண்டி நம்மால் போக முடியாது என்று நம்ப ஆரம்பித்து விட்டது. எனவே இந்த கயிறை
தாண்டி செல்லாது என்றாஅர்.


தத்துவம்: நம்மில்ல பல பேரு கூட இந்த யானை மாதிரி தாங்க.... நம்மால
முடியாதுன்னு தப்பான நம்பிக்கையினாலே முன்னேற முடிவதில்ல


Next Story
கதிர் தொகுப்பு
Trending News