Kathir News
Begin typing your search above and press return to search.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்..? பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Feb 2020 2:24 AM GMT

குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? என்பதை விட,
பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்

சுதா குப்தா, இந்தியாவில் புகழ்பெற்ற கல்வியாளர். குழந்தை உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். பன்னிரண்டு ஆண்டுகள் மாணவர்களின் மனதை அறிவதிலும், பெற்றோருடன் கலந்துரையாடுவதிலும் பழுத்த அனுபவம் பெற்றவர். ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெற்றோரிடம் ஆய்வுகள் நடத்தி குழந்தை வளர்ப்பு குறித்த முறைகளை புத்தகமாக எழுதியுள்ளார்.

அதை மையப்படுத்தி ஆயிரத்திற்க்கும் அதிகமான கட்டுரைகளை முன்னனி நாளிதழ்களில் எழுதியுள்ளார். ஏராளமான தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருமிவர், ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். குழந்தை வளர்ப்பு முறைகளை "பாஸிடிவ் பேரண்டிங்" (Positive Parenting) என்ற தலைப்பில் சிறு சிறு வாசகமாக தொகுத்து இவர் எழுதியுள்ள புத்தகத்திலிருந்து சில வாசகங்கள் தற்சமயம் சமூக வலைதளங்களிலும், வாட்சப் குழுக்குளிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன....அவை இங்கே.....

(இதை போன்ற இன்னும் பல குழந்தை வளர்ப்பு குறிப்புகளை இவரின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்....அம்முகவரி : https://www.facebook.com/PositiveParentingbySudhaGupta/)

1. உங்கள் குழந்தைகளிடம் எப்படி ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என சொல்லாதீர்கள். மாறாக எதை செய்ய வேண்டும் என சொல்லுங்கள். அவர்கள் செய்யும் தனித்துவமான செயலின் மூலம் நீங்கள் ஆச்சர்யம் அடைவீர்கள்.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்..? பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்!

2. குழந்தையை துவள செய்யும் ஒவ்வொறு தருணத்திலிருந்தும் அவனை/அவளை பாதுகாத்து கொண்டேயிருக்காதீர்கள். அது அவன் வாழ்வின் நிதர்சனத்தை கையாள தகுதியற்றவனாக ஆக்கிவிடும்.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்..? பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்!

3. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை போதிக்கும் பொழுது நீங்கள் கண்டிப்பது தவறான பழக்கத்தை மட்டும் தான் அவனை அல்ல என்பதை தெளிவுப்படுத்துங்கள்.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்..? பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்!

4. உங்கள் குழந்தையை செயல்பட வைக்க பயத்தை ஆயுதமாக பயன்படுத்தாதீர்கள். அது சில போபியாக்களையும், உணர்வு ரீதியான தடுமாற்றங்களை வருங்காலத்தில் உருவாக்க நேரிடும். அன்பு, பயமின்மை இவைகளே குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கான சிறந்த கருவிகள்.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்..? பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்!

5. உங்கள் குழந்தையின் வளர்ச்சி, வயது இவை அனைத்தையும் தாண்டி அவனை மரியாதையுடன் நடத்துங்கள். காரணம் அவர்களுக்கும் சுய மரியாதை உண்டு, அவர்களுக்கும் உணர்ச்சி உண்டு, உங்களை போலவே.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்..? பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்!

6. உங்கள் குழந்தையின் பார்வைக்கு மதிப்பளியுங்கள். உங்கள் குழந்தை உங்களிடம் "முடியாது" என்ற சொல்லை பயன்படுத்தினால் அதற்கு உங்கள் கட்டளையை குறைத்து மதிப்பிடுகிறான் என்று பொருளல்ல. அவனுக்கென்று வித்தியாசமான ஒரு பார்வை உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்..? பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்!

7. உங்கள் குழந்தை அதன் தவறை ஒப்புகொள்ள வேண்டும் என்று விரும்பினால். முதலில் நீங்கள் மன்னிப்பு கோருங்கள். உங்கள் குழந்தை சிறந்த மனிதனாக விளங்க வேண்டுமென்றால் உங்கள் வீட்டு பணியாளர்களிடம் பணிவாக பேசுங்கள். குழந்தைக்கு எடுத்துக்காட்டாக விளங்குங்கள். நீங்கள் தான் அவர்களின் முன்னோடி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்..? பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்!

8. உங்கள் குழந்தையின் ஆசிரியர் குறித்து மரியாதையற்ற விதமாக ஒரு போதும் அவர்கள் முன் பேசாதீர்கள். தங்கள் ஆசிரியரின் ஆற்றலை அல்லது அதிகாரத்தை குறித்து விளையாட்டுதனமாக தம் பெற்றோர் பேசும் தருணத்தை குழந்தைகள் பார்த்தால், அவன் ஆசிரியருக்கு செவி மடுப்பதை நிறுத்திவிடுவான். அதோடு அவன் கற்றலும் நின்று போகும்.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்..? பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்!

9. ஒருபோதும் உங்கள் கட்டுபாட்டை இழந்து குழந்தைகளை கடிந்து கொள்ளாதீர்கள். உங்கள் குழந்தையிடம் எந்த குணத்தை குறைக்க வேண்டும் என விரும்புவீர்களோ அதையே அவனிடத்தில் காட்டிகொண்டிருக்கிறீகள்.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்..? பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்!

10. சிறு பொறுமை சிறந்த பெற்றோராய் இருப்பதற்க்கான் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். எப்போதெல்லாம் உங்கள் கட்டுபாட்டை இழக்கிறீர்களோ ஒரு நிமிடம் நிதானித்து உங்கள் குழந்தை பருவத்தை நினைவில் கொள்ளூங்கள்.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்..? பெற்றோர் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News