Top
undefined
Begin typing your search above and press return to search.

கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக போர்கொடி உயர்த்திய முஸ்லிம் அடிப்படைவாதிகள்! மதசார்பின்மைவாதிகள் எங்கே?

கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக போர்கொடி உயர்த்திய முஸ்லிம் அடிப்படைவாதிகள்! மதசார்பின்மைவாதிகள் எங்கே?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Feb 2020 7:27 AM GMT



பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இஸ்லாமியராக இருந்தாலும், தம் விருப்படி வாழ வேண்டும் என்கிற சுதந்திர எண்ணம் கொண்டவர்.


இந்நிலையில் ஷமியின் பெண் குழந்தை, ஹிந்து கடவுள் திருவுருவத்தின் முன் சேலையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, “என் செல்ல மகளே உன்னை இறைவன் ஆசிர்வதிக்கட்டும், உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


இதனைத்தொடர்ந்து முஸ்லிம் அடிப்படைவாதிகள் ஷமியை கடுமையாக விமர்சிக்கத்தொடங்கிவிட்டனர். “உன் குடும்பம் நரகத்திற்கு செல்லும். இஸ்லாம் மதத்திற்கு எதிராக செயல்படும் உன்னை அல்லா மன்னிக்கமாட்டான்” என்று அவரின் குடும்பத்தை இழிவு செய்து வருகின்றனர்.
இது மதசார்பற்ற கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.


போலி மதச்சார்பின்மை பேசும் தலைவர்கள் ஷமி போன்ற ஒரு இஸ்லாமியர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் பொழுது கோமா நிலைக்கு போய் விடுவது வழக்கமாகிவிட்டது.


Next Story