Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.கவுக்கு தாவி வந்த 10 எம்எல்ஏ க்களுக்கு மட்டுமே இன்று அமைச்சர் பதவி!! பதவி கிடைக்காதவர்கள் குறித்து எடியூரப்பா மனம் திறந்த பேட்டி!

பா.ஜ.கவுக்கு தாவி வந்த 10 எம்எல்ஏ க்களுக்கு மட்டுமே இன்று அமைச்சர் பதவி!! பதவி கிடைக்காதவர்கள் குறித்து எடியூரப்பா மனம் திறந்த பேட்டி!

பா.ஜ.கவுக்கு தாவி வந்த 10 எம்எல்ஏ க்களுக்கு மட்டுமே இன்று அமைச்சர் பதவி!! பதவி கிடைக்காதவர்கள் குறித்து எடியூரப்பா மனம் திறந்த பேட்டி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Feb 2020 3:07 AM GMT


கர்நாடக முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு நேற்று மாலை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிகையில் “ வியாழக்கிழமை ( இன்று ) காலை 10.30 மணியளவில் பெங்களூர் ராஜ்பவனில் அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது.


இந்த நிகழ்ச்சியில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்து மீண்டும் வெற்றி பெற்ற 10 எம்எல்ஏ க்கள் மட்டுமே அமைச்சர்களாக சேர்க்கப்படுவார்கள். டெல்லியில் கட்சித் தலைவர் மற்றும் பிற தலைவர்களுடனான எனது கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறினார்.


தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் டிசம்பர் இடைத்தேர்தலில் பாஜக டிக்கெட்டில் வெற்றி பெற்ற 11 கிளர்ச்சி காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவரான அதானி தொகுதி எம்எல்ஏ மகேஷ் குமத்தள்ளி மட்டும் ஆறு மாத காலத்துக்குப் பிறகு அமைச்சரவையின் இரண்டாவது விரிவாக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார் எனவும் எடியூரப்பா கூறினார்.


"மற்றொரு பாஜகவில் சேர்ந்த எம்எல்ஏ வான உமேஷ் கட்டி பின்னர் அமைச்சராக்கப்படுவார் என்று நான் உறுதியளித்துள்ளேன். அதே போல நாங்கள் மகேஷ் குமதஹள்ளியுடன்பேசிக் கொண்டிருக்கிறோம். அவருக்கு இடமளிப்பது கடினமாக இருக்கலாம், ஆனால் வேறு சில முக்கிய பொறுப்புகளை நாங்கள் அவருக்கு வழங்குவோம்" இப்போதைக்கு, வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர்களை மட்டுமே அமைச்சர்களாகஆக முடியும். அடுத்த எனது டெல்லி பயணத்தின் பின்னர் மீதமுள்ளவர்கள் குறித்து முடிவெடுப்பேன்" என்று கூறினார் எடியூரப்பா.


காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கட்சிகளை சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் செய்த உள்கட்சி கலாட்டா கடந்த ஆண்டு ஜூலை மாதம் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி ஆட்சி சரிவதற்கு வழிவகுத்தது. இது பாஜக அரசாங்கத்தை உருவாக்க வழி வகுத்தது. இதனால் ஏற்பட்ட நன்றி கடனுக்கு கடமைப் பட்டே பாஜக மேலிடமும், எடியூரப்பாவும் இந்த முடிவுக்கு வந்ததாகவும், இதற்காகவே பல மாதங்களாக அமைச்சரவை விஸ்தரிப்பு தள்ளி வைக்கப்பட்டதாகவும் கர்நாடக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.


தற்போது, மொத்தமுள்ள 34 இடங்களில் அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட 18 கேபினட் அமைச்சர்கள் உள்ளனர். பதினாறு இடங்கள் காலியாக உள்ளன. அதில் பாஜக தலைவர்கள் 3 பேர் கேபினட் அமைச்சர்களாக மாற்றப்படுவார்கள் என்றும் இது குறித்து விவாதிக்க டெல்லி வருமாறு கட்சி மேலிடம் தன்னிடம் கேட்டுக் கொண்டதாக எடியூரப்பா கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News