கல்லூரிகளில் இருபாலர் கல்வி முறை ரத்து?- தாலிபான்கள் வெளியிட்ட முதல் அறிவிப்பு !

Breaking News.

Update: 2021-08-21 13:38 GMT

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்று கூறிய சில நாட்களிலேயே ஹெராத் மாகாணத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து படிக்கும் இருபாலர் கல்வி நிறுவனங்களுக்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். மேலும் இருபாலரும் சேர்ந்து கல்வி கற்பது சமுதாயத்தில் உள்ள அனைத்து தீமைகளுக்குமான வேர் என்று அறிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தலிபான் அதிகாரிகளுக்கிடையேயான சந்திப்பிற்க்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக 'Khaama Press' என்ற செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் வெளியான முதல் ஃபத்வா(அறிவிப்பு) இதுவாகும்.

தாலிபான்களின் நீண்டகால செய்தித் தொடர்பாளரான முஜாஹித் முதல்முறையாக பொதுமக்கள் முன்பு தோன்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது பெண்களின் உரிமைகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு மதிப்பிடுவதாக உறுதியளித்தார். ஆனால் தற்போது அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக ஆசிரியர்களிடம் மூன்று மணி நேர பேச்சு வார்த்தை நடத்திய தாலிபான்கள் இருபாலர் கல்வியை தடை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் பெண் பேராசிரியர்கள் பெண்கள் பயிலும் கல்லூரிகளில் மட்டுமே பணி அமர்த்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.

'இருபாலர் கல்வி சமுதாயத்தில் உள்ள அனைத்து தீமைகளுக்குமான வேர்' என்று தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு தசாப்தங்களில், ஆப்கானிஸ்தான் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஆண் பெண் குழந்தைகள்/இளைஞர்களுக்கு தனி வகுப்புகள் என்ற முறையை கடைபிடித்து வந்தனர். ஆனால் தற்போது இந்த இருபாலரும் பயிலும் கல்வி முறையை தடை செய்வதாக தாலிபான் அறிவித்துள்ளது.


‍ Source : Mathrubhumi

Tags:    

Similar News