Top
undefined
Begin typing your search above and press return to search.

எண்ணெய் வழங்குவதை நிறுத்திய சவூதி அரேபியா - மூக்குடைபட்ட பாகிஸ்தான்.!

எண்ணெய் வழங்குவதை நிறுத்திய சவூதி அரேபியா -  மூக்குடைபட்ட பாகிஸ்தான்.!

JananiBy : Janani

  |  9 Aug 2020 11:55 AM GMT

காஷ்மீர் விவகாரம் காரணமாக, இஸ்லாம் நாடுகளின் அமைப்பை (OIC) உடைக்க இம்ரான்கானின் பாகிஸ்தான் அரசாங்கம் மிரட்டியதை அடுத்து ஆகஸ்ட் 8 அன்று, கடனைக் காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு எண்ணெய் வழங்குவதை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளது. 2018 இல் பொருளாதார நெருக்கடியால் சவுதி அரேபியாவிடம் இருந்து பாகிஸ்தான் 6.2 பில்லியன் டாலர் கடன் வாங்கியது. கடன் கொடுப்பதில் 3.2 பில்லியன் டாலர் பாதிப்புள்ள எண்ணெய்யையும் வழங்கியது சவுதி அரேபியா, கடனை திருப்பிச்செலுத்த ஒருவருடம் காலம் ஒத்திவைக்கப்பட்டது.

இஸ்லாமாபாத்துக்குக் கொடுக்கப்பட்ட முன்னேற்பாடு இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவடைந்தது அதனை இன்னும் ரியாத் புதுப்பிக்கவில்லையென்று சனிக்கிழமையன்று பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக, இஸ்லாமாபாத் சவூதி கடனில் 1பில்லியன் டாலரைப் பணம் செலுத்த வேண்டிய நான்கு மாதங்களுக்கு முன்பே வழங்கியதென்று பெட்ரோலிய பிரிவின் செய்தி தொடர்பாளர் சஜீத் காசி, 'தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் ஆதாரங்களை' மேற்கோள்காட்டிக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி செய்தியாளர்களிடையே பேசுகையில் சவூதி அரேபியா தலைமையின் கீழ் OIC காஷ்மீர் வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் கூட்டம் நடத்தவில்லை எனில் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் தனது கூட்டாளிகளான இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து நடத்துவார் என்று மிரட்டியுள்ளார். காஷ்மீர் குறித்துப் பல முறை பாகிஸ்தான் கூட்டத்தை நடத்தக் கோரிக்கை விடுத்த போதும், உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய கூட்டமைப்பு நாடான OIC மறுத்துவிட்டது. கடந்த எழுவது வருடங்களாக பாகிஸ்தான் ராணுவம் நான்கு முறை படை எடுத்துள்ளது.

ஆகஸ்ட் 2019 இல் இருந்து ஜம்மு&காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த நிலையில், இம்ரான்கான் அரசு OIC இன் 57 உறுப்பினர்களின் ஆதரவைப் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கொண்டுவர எண்ணுகிறது. அனைத்து இஸ்லாமிய நாடுகளின் தலைவரான சவூதி அரேபியாவை மாற்றுவதை எண்ணமாகக் கொண்ட துருக்கி ஜனாதிபதி ரிசெப் தய்யிப் எர்டோகன் மேல் கொண்ட அதிருப்தியால் OIC பாகிஸ்தானுக்கு ஆதரவை வழங்க மறுக்கின்றது.

Source:https://tfipost.com/ians-news/saudi-holds-back-oil-to-pak-after-qureshis-threat-to-split-oic/

Next Story