Top
undefined
Begin typing your search above and press return to search.

கடும் கண்டனங்கள்: 800 படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகுவாரா.?

கடும் கண்டனங்கள்: 800 படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகுவாரா.?

AmrithaBy : Amritha

  |  17 Oct 2020 11:45 AM GMT

விஜய் சேதுபதி கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து 800 என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன. அந்த வகையில் தற்போது படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று பலர் பல கண்டனங்களை கிளப்பி வருகின்றனர்."ஷேம் ஆன் விஜய் சேதுபதி" என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.






கவிஞர் வைரமுத்து டுவிட்டரில், "கலையாளர் விஜய் சேதுபதிக்கு, சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிட செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும்.நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு? இன உரிமைக்காக கலை உரிமையை விட்டு கொடுப்பதே விவேகம். நீங்கள் விவேகி" என்று என்று பதிவிட்டுள்ளார். மேலும் பல பிரபலங்களான இளையராஜா,சீமான்,டாக்டர் ராமதாஸ்,வைகோ,தாமரை, சேரன்,சீனுராமசாமி ஆகியோரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வாறு பல கண்டனங்கள் எதிர்த்து வரும் காரணத்தினால் விஜய்சேதுபதி அவர்களது நண்பர்களுடன் படத்தில் நடிப்பதா.? விலகுவதா.? என்று ஆலோசித்து வருவதாகவும் இதற்கான முடிவை விஜய்சேதுபதி விரைவில் வெளியிடுவார் என தெரியவருகிறது.

Next Story