Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் 6 ஆக அதிகரிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் 6 ஆக அதிகரிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தகவல்!

Vignesh KBy : Vignesh K

  |  21 March 2020 12:43 PM GMT

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள வைரஸ் பாதிப்பால் இதுவரை 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்க பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை மூன்று பேருக்கு தான் கொரோனா பாதிப்பு இருந்தது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அடைந்தவரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


தாய்லாந்தில் இருந்து வந்த இருவரும் மற்றும் நியூசிலாந்தில் இருந்து வந்த ஒருவரும் கொரோன வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்கள் 6 ஆக அதிகரித்துள்ளது.

Next Story