Top
undefined
Begin typing your search above and press return to search.

ஊரடங்குக்கு ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்பை தாக்கும் இஸ்லாமியவாதிகள்! மத வெறியின் உச்சம்!

ஊரடங்குக்கு ஆதரவு தெரிவித்த  கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்பை தாக்கும் இஸ்லாமியவாதிகள்! மத வெறியின் உச்சம்!

Vignesh KBy : Vignesh K

  |  23 March 2020 5:59 AM GMT

பிரதமரின் ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததற்காகவும் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்பை தாக்குகின்றனர் இஸ்லாமியவாதிகள்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் படைவீரர்களுக்கு முழு நாடும் நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவரும் கைகளை தட்டுமாறு பிரதமர் மோடி தெரிவித்தார். இதற்கு பல பிரபலங்களும் இதில் இணைந்தனர். இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மாலை 5 மணிக்கு பால்கனியில் கைகளை தட்டி நன்றி தெரிவித்தார்.

இதற்காக கைஃப்பை பணம் சம்பாதித்த பின்னர் தனது மதத்தை மறந்துவிட்டதாக கூறி மத வெறிகொண்ட இஸ்லாமியவாதிகள் அவரை தாக்கியுள்ளனர். ஒரு இஸ்லாமியவாதி கைஃப்பின் மனைவியை தாக்கி, நபிகள் நாயகத்தின் இளைய மகள் பாத்திமா சஹ்ரா மற்றும் அவரது மனைவிகளில் ஒருவரான கதீஜாவைப் பற்றி கேள்விப்படவில்லையா என்று மத வெறியுடன் கேள்வி கேட்டுள்ளார்.




Next Story