Top
undefined
Begin typing your search above and press return to search.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் மட்டும் இருக்கும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் மட்டும் இருக்கும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Vignesh KBy : Vignesh K

  |  23 March 2020 7:45 AM GMT

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 396 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உள்ளது.

நேற்று மார்ச் 22-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்த படி ஊரடங்கு உத்தரவு மக்களால் பின்பற்றப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது. ஆனால் நாடு முழுவதும் வரும் 31-ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தருணத்தில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்கள் மற்றும் இந்திய அளவில் 80 மாவட்டங்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தனித்தன்மையில் இருக்கும் மாவட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள்.

இதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகளை மூட வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது மற்றும் பொது மக்கள் அதிகமாக கும்பல் கூட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் மற்றும் சுகாதாரத் துறை கிருமி நாசினி அடித்து வரப்பட்டு உள்ளது.

Next Story