Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரோனா தடுப்பு : பிரதமரின் ஊரடங்கும் உத்தரவுக்கு ரஜினிகாந்த் வீடியோ மூலம் ஆதரவு!

கொரோனா தடுப்பு : பிரதமரின் ஊரடங்கும் உத்தரவுக்கு ரஜினிகாந்த் வீடியோ மூலம் ஆதரவு!

Vignesh KBy : Vignesh K

  |  21 March 2020 12:24 PM GMT

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள வைரஸ் பாதிப்பால் இதுவரை 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்க பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் வகையில் நாளை 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கும் உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் மக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

இந்த கருத்துக்கு நடிகர்களும் மற்றும் பிரபலங்களும் பிரதமர் மோடியின் கோரிக்கையை ரசிகர்களுக்கும், மக்களுக்கும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல் நேற்று மாலை இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் இன்று விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஊரடங்கும் உத்தரவை வரவேற்று அதைப்பற்றி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியது:


கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அடைந்த நாடுகளில் இந்தியாவில் இரண்டாவது நிலையில் உள்ளது. இந்த தொற்று மூன்றாவது கட்டத்திற்கு பரவாமல் தடுக்க வேண்டும். மேலும் மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே 12 முதல் 14 மணி நேரம் இருந்தாலே மூன்றாவது கட்டத்திற்கு வைரஸ் தொற்று பரவாமல் தடுத்துவிடலாம். இதற்காக தான் பிரதமர் மோடி ஊரடங்கும் உத்தரவை அறிவித்துள்ளார்.

Next Story