Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரோனா நோய் பரவாமல் இருக்க வேண்டி ஸ்ரீ பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் மஹா சாந்தி ஹோமம்

கொரோனா நோய் பரவாமல் இருக்க வேண்டி ஸ்ரீ பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் மஹா சாந்தி ஹோமம்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 March 2020 11:34 AM GMT

உலகையை கோரோனோ நோய் அச்சுறுத்தி வருகிறது மேலும் இந்தியாவில் கொரோனா நோய் பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய் பரவாமல் இருக்க புதுச்சேரி அருகே உள்ள 36அடி உயரமுள்ள உலக பிரசித்திபெற்ற ஸ்ரீ பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீ மஹா சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் சிறப்பு சிறப்பு யாக குண்டம் அமைக்கப்பட்டுப் அகில்,குகில், கருங்காலி, வென்கடுகு போன்ற அரியவகை மூலிகை மற்றும் 7 திரவியங்களை கொண்டு இந்த ஹோமம் செய்யப்பட்டது.


மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹோமத்தில் கலந்துகொள்ள பக்தர்கள் யாரும் அனுமதிக்கவில்லை. கொரோனா நோய் பரவாமல் இருக்கவும், நோய் தாக்கியவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும், உலக மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ இந்த ஹோமம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story