Top
undefined
Begin typing your search above and press return to search.

பொய்ச் செய்தியை பரவாமல் தடுக்க வேண்டும் - பிரதமர் மோடி கோரிக்கை!

பொய்ச் செய்தியை பரவாமல் தடுக்க வேண்டும்  - பிரதமர் மோடி கோரிக்கை!

Vignesh KBy : Vignesh K

  |  24 March 2020 3:48 PM GMT

கொரோனா வைரஸ் பற்றி வெளியாகும் பொய் செய்திகளை நம்பாமல் அதை எதிர்த்து போராடும் வலிமையை மக்கள் உள்ளத்தில் விதைக்க வேண்டும் என பத்திரிகையாளர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் 11 மொழிகளில் வெளிவரும் தேசிய மற்றும் பிராந்திய பத்திரிக்கையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மூத்த பத்திரிகையாளர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசினார்.

அவர் பேசியது:, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சமூகத்திலிருந்து விலகி தனிமையில் இருப்பதே முக்கியம். மக்களிடம் இதைப்பற்றிய விழிப்புணர்வை எடுத்துச் செல்ல வேண்டும்.

ஊரடங்கு உத்தரவு அனைத்து மாநிலங்களும் எடுத்துள்ள முடிவை சிறப்பானது என அனைத்து வாசகர்களிடம் தெரிவிக்க வேண்டும். மக்களிடம் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் உணர்வை மனதில் பதிக்க வேண்டும்.

மேலும் மக்களிடம் வதந்தி செய்தியை மற்றும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் சில ஊடகங்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளை தவிர்த்து மக்கள் உள்ளத்தில் உறுதியை கொண்டு வர வேண்டும்.

கிராமம், நகரம் என நம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தகவலை சிறப்பாக கொண்டு சேர்க்கும் பணியை பத்திரிகைகள் செய்து வருகின்றனர். பொய்ச் செய்தி மட்டும் வதந்தி செய்தியை முறியடித்து சரியான தகவலை குக்கிராமம் வரை எடுத்துச் செல்ல வேண்டும்.

கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் மற்றும் அதை பற்றி யாரிடம் அணுக வேண்டும் இப்படி தனித்தன்மையை ஏற்படுத்த வேண்டும் அதற்கான தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்துவது முக்கியமாகும்.

உரடங்கும் போது அனைத்து அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் இடங்களை பற்றிய தகவல்களையும் தெரிவிக்க வேண்டும்

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார் பேசினார்

மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டிய பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் இரு கை கூப்பி நன்றி தெரிவித்தார்.

Next Story