Top
undefined
Begin typing your search above and press return to search.

"வாரணாசியில் தலித்துகள் புல்லை உண்ணும் அவலம்" என போலி செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள் - கையும் களவுமாக மாட்டினர்!

வாரணாசியில் தலித்துகள் புல்லை உண்ணும் அவலம் என போலி செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள் - கையும் களவுமாக மாட்டினர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 March 2020 3:05 AM GMT

பொதுவாக கிராமப்புறங்களில் செடி வகை துவரம் பருப்பு பரவலாக பயிரிடப்படுகிறது. அறுவடையான இந்த செடிகளில் இருந்து பச்சை துவரை காய்களை பறித்து அதன் உள்ளிருக்கும் பச்சை பருப்பை சிறுவர்கள் ஆர்வத்துடன் உண்பது வழக்கம். அந்த வகையில், பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியில் வரும் வாரணாசி மாவட்டத்தில் உள்ள கொயிர்பூர் என்ற கிராமத்தில் கோதுமை அறுவடையான நிலங்களில் வளரும் அக்ரி தால் எனப்படும் பருப்பு செடிகளில் இருந்து கிராமத்து சிறுவர்கள் சிலர் பயிறு பறித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதை பார்த்த ஜனசந்தேஷ் என்கிற பத்திரிக்கையின் ஆசிரியர் விஜய் வினீத் சிறுவர்கள் செடிகளில் இருந்து பயிறு பறித்து சாப்பிடும் அந்த காட்சியை படம் பிடித்தார். அதை தனது பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் ஒரு கட்டுரையுடன் பிரசுரித்தார். அதில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பல கிராமங்களில் தலித்துகளான முசாஹர் பிரிவை சேர்ந்தவர்கள் ஆடு மாடுகள் சாப்பிடும் புல் சாப்பிடுகிறார்கள் என்றும், பிரதமரின் கொரோனா ஊரடங்கு அமலானதில் இருந்து அந்த மக்கள் வேலைக்கு போக முடியவில்லை என்றும், அதனால் ஏற்பட்ட வறுமையால் சிறுவர்கள் புல் சாப்பிடுவதாகவும் ஒரு கட்டுரை எழுதி முதல் பக்கத்தில் அப்பட்டமான போலி செய்தியை வெளியிட்டார்.

உண்மையில் பிரதமரை அவதூறு செய்வதற்காகவே எழுதி வெளியிடப்பட்ட கட்டுரை என்று தெரிந்தும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையும் இந்த கட்டுரையை படத்துடன் பிரசுரித்தது. மோடிக்கு எதிரான பொய் கருத்தை பரப்பும் எண்ணங்கள் கொண்டவர்களும் சமூக ஊடகங்களில் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டார்கள்.


இந்த நிலையில் இந்த கட்டுரை வெளியான சென்ற மார்ச் 26-ஆம் தேதி அன்றே வாரணாசி மாவட்ட ஆட்சியர் கவுஷல்ராஜ் ஷர்மா ஜனசந்தேஷ் பத்திரிகையாளர் விஜய் வினீத்துக்கும், கட்டுரையை வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், நீங்கள் வெளியிட்ட செய்தி பொய்யான செய்தி என்றும் குழந்தைகள் புல் எதுவும் சாப்பிடவில்லை, சாப்பிட்டது ஒரு வகையான 'அக்ரி தால்' பயிரு வகைதான் என்றும், மறுநாள் 27-ஆம் தேதி தவறான தகவல்களை பரப்பியதற்காக வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவரை அந்த பத்திரிக்கையும், மற்ற பத்திரிக்கைகளும் விளக்கம் தரவோ, வருத்தம் தெரிவிக்கவோ இல்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் கவுஷல்ராஜ் ஷர்மா பத்திரிகைகள் மற்றும் செய்தி வெளியிட்டவர் மீது அடுத்த கட்ட குற்றவியல் நடவடிக்கை எடுக்க உள்ளார்.




மேலும் கிராமங்களில் கோதுமை அறுவடையான நிலங்களில் இருந்து கிடைக்கும் அக்ரி தால் எனப்படும் பயிரை தனது இளம் வயதில் சாப்பிட்டிருப்பதாகவும், தனது மகனுடன் அந்த பயிரை சாப்பிடும் படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் கிராமப்புறங்களில் இந்த வழக்கம் நீண்ட காலமாகவே உண்டு என்றார் வாரணாசி மாவட்ட ஆட்சியர் கவுஷல்ராஜ் ஷர்மா.


Article Credits - OpIndia

Next Story