Top
undefined
Begin typing your search above and press return to search.

தொடர்ந்து வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக பரப்பப்படும் போலி செய்தி - பின்னணி என்ன ?

தொடர்ந்து வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக பரப்பப்படும் போலி செய்தி - பின்னணி என்ன ?

Raghavan VBy : Raghavan V

  |  14 May 2020 10:44 AM GMT

கொரோனா பரவலை தவிர்க்க மக்கள் உஷாராக இருந்து வரும் இந்த இக்கட்டான காலத்தில்கூட, சில வலைத்தள மோசடி கும்பல்கள் வாட்சப்-ல் அரசாங்கத்தை தொடர்புபடுத்தி சில போலியான தகவல்களை கொண்டு தொழிலர்களை சீண்டும் நோக்கத்தில் பரப்பி வருகின்றனர்.

அந்த தகவல்களின்படி, இந்தியாவில் 1990 முதல் 2020 வரை பணியாற்றிய தொழிலாளர்களுக்கு, தொழிலாளர்கள் அமைச்சகத்தில் இருந்து ரூ.120000 பெற உரிமை உண்டு என்ற பொய்யான செய்தி ஒன்று வாட்சப்-ல் பரவத்தொடங்கியுள்ளது.

இந்திய அரசாங்கம் அத்தகைய எந்த அறிவிப்பும் வழங்கவில்லை என்றும். இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், தொழிலாளர்கள் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இத்தகைய மோசடி வலைத்தளங்களில் இருந்து மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மக்களுக்கு மத்திய அரசின் மீது தவறான புரிதலை ஏற்படுத்தும் விதமாக இத்தகைய தகவல்கள் பரப்பும் சில மோசடி கும்பல்களிடம் இருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள வேண்டும்.

Next Story