Top
undefined
Begin typing your search above and press return to search.

புலம் பெயர்ந்தோர்களுக்கான ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தி இந்து பத்திரிகை பொய் செய்தி : தி இந்து ஒரு பொய்யின் உரைகல் என்பதை நிரூபித்த உண்மை தகவல்கள்.!

புலம் பெயர்ந்தோர்களுக்கான ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தி இந்து பத்திரிகை பொய் செய்தி : தி இந்து ஒரு பொய்யின் உரைகல் என்பதை நிரூபித்த  உண்மை தகவல்கள்.!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  3 May 2020 3:26 AM GMT

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சொந்த இடத்திலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பலருக்கு ஊர் திரும்பும் வசதியாக மோடி அரசு 'ஷ்ராமிக்' என்ற பெயரில் சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளது.

பல்வேறு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களில் பயணிகளை பாதிக்கும் விதத்தில் ரயில்வே ஸ்லீப்பர் வகுப்பு கட்டணத்துடன் கூடுதலாக ஒரு பயணிக்கு ரூ. 50 கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக என்று 'தி இந்து' ஆங்கிலப்பத்திரிக்கை ஒரு பொய்யான செய்தியை தெரிவித்துள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு சமூக ஊடகங்களிலும் ஒரு கும்பல் மோடி அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி மக்களை குழப்பி வ்ருகின்றனர்.


இந்த நிலையில் ஹிந்து இதழ் வெளியிட்ட போலி செய்திகளை மறுத்து ரயில்வே துறை வெளியிட்ட உண்மை தகவல்களாவன:

"புலம்பெயர்ந்த மக்களுக்கான ரயில்களில் ஸ்லீப்பர் வசதி உட்பட கட்டணம் ரூபாய் 30 மட்டுமே. இடை நில்லா ரயில்கள் என்றாலும் குறிப்பிட்ட முக்கிய இடங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும். எவ்வளவு தூரம் என்றாலும் இதே கட்டணம்தான், அவர்கள் ஊர் சென்று அடைவதற்குள் அவர்களுக்கு ஆகின்ற உணவு செலவு முழுவதையும் ரயில்வேயே ஏற்கிறது. என்றாலும் உணவுக்கான குறைந்த பட்ச கட்டணமாக ரூபாய்.20 மட்டுமே. அதுமட்டுமல்லாமல் இந்த கட்டணங்களை ரயில்வே பயணிகளிடம் இருந்து வசூலிக்கவில்லை. மாநில அரசுகளே இந்த பயணங்களை ஏற்பாடு செய்வதால் அவர்களே இந்த கட்டணங்களுக்கு பொறுப்பாகும். மேலும் வைரஸ் பாதிப்புகள் இல்லாமல் இருக்க இடைவெளி விடப்படுவதால் ரயிலின் மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்த படுகிறது.

உண்மையில் இந்த பயணத்துக்காக பயணிகள் செலுத்துவது ஒரு பைசாக் கூட இல்லை. அதிக பட்சமாக ரூ.50 செலுத்தப்போவது மாநில அரசுகள்தான். இவை வழக்கமான ரயில்கள் அல்ல, மாநில அரசின் வேண்டுகோளின் பேரில் இயங்கும் சிறப்பு ரயில்கள்" என கூறியுள்ளது. இந்த நிலையில் வழக்கம் போல கட்டணத்துடன் பயணிகளிடமிருந்து கூடுதலாக ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஹிந்து பத்திரிகை போலி வெளியிட்டிருப்பது ஒரு பத்திரிக்கைக்கு உண்டான கவுரவத்தை கேவலப்படுத்தும் செயல் என்றும், ஒரு பாரம்பரியத்துக்குரிய பத்திரிகை என தன்னை கூறிக்கொள்ளும் ஹிந்து இதழ் இவ்வாறு தரம் கெட்ட வகையில் செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பலாமா எனவும் பலர் விமர்சித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த ரயில்கள் மாநில அரசுகளின் ஏற்பாட்டால் இயக்கப்படுகிறது என்பது என்பது ஹிந்து பத்திரிக்கைக்கு தெரியாதா?

ஹிந்து இதழ் வெளியிட்ட இந்த பொய் செய்தியை ஆராயாமல், இதை உண்மை என நம்பி மோடி எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகங்களில் இழிவான முறையில் பதிவிட்டு வருகின்றனர். இந்த போலி பிரச்சாரத்தில் வீழ்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ரோஹினி சிங் கூட புலம்பெயர்ந்தோரின் பயணத்துக்கு பணம் செலுத்த PM-CARES இன் நிதி பயன்படுத்தப்பட வேண்டியது தானே என கருத்து பதிவிட்டுள்ளார் என்றால் மோடி எதிர்ப்பு என்ற பெயரில் இவர்கள் தங்கள் கடமையை மறந்து விட்டு எங்கே செல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த ஒரு முறை மட்டுமல்ல இதற்கு முன் ஏகப்பட்ட சம்பவங்களில் இந்த பத்திரிகை போலி செய்தி வெளியிட்டு பிறகு மூக்கு அறுபட்டு ரத்தம் சொட்ட ..சொட்ட நின்ற சம்பவங்கள் எக்கச்சக்கம் என கூறப்படுகிறது.

Next Story