Top
undefined
Begin typing your search above and press return to search.

கடன் தள்ளுபடி விவகாரத்தில் போலி செய்தி வெளியிட்டதற்கு பகிரங்க வருத்தம் தெரிவித்த ஒன் இந்தியா தமிழ்!

கடன் தள்ளுபடி விவகாரத்தில் போலி செய்தி வெளியிட்டதற்கு பகிரங்க வருத்தம் தெரிவித்த ஒன் இந்தியா தமிழ்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 May 2020 12:59 PM GMT

மத்திய அரசும் வங்கிகளும் சமீபத்தில் தொழிலதிபர்களுக்கான ₹68,000 கோடி கடனை தள்ளுபடி செய்ததாக போலி செய்தி பலரால் பரப்பப்பட்டது. இந்த தொழில் அதிபர்களில் பல வங்கியில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் அடக்கம் என்றும் இந்த போலி செய்தியில் பரப்பப்பட்டது. இத்தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாக தினகரன், தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ் போன்ற ஊடகங்கள் தெரிவித்து இருந்தன.

இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் write off என்றால் தள்ளுபடி என்று அர்த்தமல்ல, தள்ளி வைப்பு என்று விளக்கி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இதுபோன்ற ஒரு பொய் செய்தியை மக்களிடையே பரப்பி மத்திய அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டதற்காக வழக்கறிஞர் ஆர்.ராமலிங்கம் நேற்று தினகரன், தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ் ஆகிய மூன்று ஊடக நிறுவனத்திற்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.


இதற்கு ஒன் இந்தியா ஆசிரியர் குழு தங்கள் தவறை உணர்ந்து பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளது. அதற்காக தெளிவுபடுத்தப்பட்ட ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளதாகவும் ஒன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்கட்டுரை "விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழிலதிபர்களின் ரூ. 68,607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை!" என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


Next Story