Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்கள் மட்டுமே புலம்பெயரும் வெளி மாநில பயணிகளிடம் ரயில் கட்டணம் வசூலிகின்றன : அனைத்து மாநிலங்களும் வசூலிக்கின்றன என டைம்ஸ் நவ் பத்திரிகை பொய் செய்தி.!

கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்கள் மட்டுமே புலம்பெயரும் வெளி மாநில பயணிகளிடம் ரயில் கட்டணம் வசூலிகின்றன : அனைத்து மாநிலங்களும் வசூலிக்கின்றன என டைம்ஸ் நவ் பத்திரிகை பொய் செய்தி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 May 2020 3:09 AM GMT

கொரோனா தடுப்புக்காக நாடு முழுவதும் கடந்த ஒண்ணரை மாதங்களாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவால் வெளி மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு பிழைக்க வந்த கூலி தொழிலாளர்கள், மாணவர்கள், யாத்ரீகர்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் ஆங்காங்கு சிக்கி தவிக்கின்றனர். இவர்கள் தற்போது தங்கள் சொந்த ஊர் சென்று விட வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளனர். ஒரு சில இடங்களில் ஆர்ப்பட்டமும் நடத்துகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளில் இவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதை மத்திய அரசு முக்கிய அம்சமாக கொண்டுள்ளது. இதனால் சராசரியாக ஒரு பயணிக்கு ஆகும் ரூ.300 ரயில் கட்டணத்தில் மத்திய அரசின் கோரிக்கைக்கேற்ப ரயில்வே ரூ.30 மட்டுமே கட்டணமாக விதித்துள்ளது. அதாவது மொத்த கட்டணத்தில் 85 சதவீதத்தை ரயில்வே ஏற்கிறது. மீதியுள்ள கட்டணம் அதாவது ரூபாய் முப்பதுடன், இருபது ரூபாய் உணவு செலவாக ரூ.50 மாநில அரசுகள் ஏற்கவேண்டும் என்பது திட்டமாகும்.

இதன்படி பல மாநில அரசுகள் இதற்கான பயணங்களை ஏற்பாடு செய்து வெளி மாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு புலம்பெயரும் பயனாளர்களிடம் கூடுதல் கட்டணம் பெறுவதாக ஹிந்து ஆங்கில பத்திரிகை உட்பட பல ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டன.

ரயில்வே விளக்க அறிக்கை வெளியிட்டவுடன் தற்போது உண்மையை புரிந்து கொண்ட இந்த எதிர்ப்பு ஊடகங்கள் இப்போது மாநில அரசுகளை செலவை ஏற்க வைப்பதா, ஏன் பிரதமர் தனது கேர் நிவாரண நிதியில் இருந்து தருவதுதானே என புதிய குற்றச்சாட்டை கூறுகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், காங்கிரஸ் ஆதரவில் சிவ சேனாவால் ஆட்சி நடத்தப்படும் மகாராஷ்டிரா, கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள மாநிலங்கள் மட்டும்தான் புலம்பெயரும் தொழிலாளர்களிடம் ரயில் செலவுகளுக்கான ரூ. 50 ஐக் கூட கட்டாயமாக வசூலிப்பதாக டைம்ஸ் நவ ஆங்கில பத்திரிகை ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. இம்மாநிலங்களின் அமைச்சர்கள் மீண்டும் ரயில்வே அமைச்சருக்கே கட்டணம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளதாக அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

Next Story