Top
undefined
Begin typing your search above and press return to search.

காசியில் படகோட்டிகள் உணவில்லாமல் உறங்குவதாக ஊடகங்கள் பொய் பிரச்சாரம் - "அன்னபூரணி ஆளும் நகரில் எவரும் பசியுடன் தூங்குவதில்லை" என்று படகோட்டிகள் பதிலடி.!

காசியில் படகோட்டிகள் உணவில்லாமல் உறங்குவதாக ஊடகங்கள் பொய் பிரச்சாரம் - அன்னபூரணி ஆளும் நகரில் எவரும் பசியுடன் தூங்குவதில்லை என்று படகோட்டிகள் பதிலடி.!

VinithaBy : Vinitha

  |  4 Sep 2020 1:30 AM GMT

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியப் பொருளாதாரத்தைத் தாக்கியுள்ளது என்பது உண்மைதான் என்றாலும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஒரு சிலர் இதனைப் பயன்படுத்தி தங்களுக்கு சுய விளம்பரத்தை தேடிக் கொள்கின்றனர். சமீபத்தில் சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதில் வாரணாசியில் உள்ள படகோட்டிகள் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள் என்றும் 350 குடும்பங்கள் பசியுடன் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் கூறப்பட்டது.

நடிகர் சோனு சூட் இந்த பதிவினை பார்த்து தான் அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார் . சில ஊடகங்களும் அந்த பகுதியில் உள்ள படகோட்டிகள் 'தங்களிடம் உள்ள நகைகளை விற்கும் கட்டாயத்தில் உள்ளனர். மேலும் அவர்கள் தங்களுக்கு உதவ முன்வந்த நடிகரிடம் உதவிகளை கேட்க தொடங்கியதாகவும்' செய்தி வெளியிட்டன.

இருப்பினும் உண்மை நிலவரம் தலை கீழாகவே இருந்தது. OpIndia செய்தி தளத்திடம் பேசிய நிஷத்(படகோட்டி சமூகம்) சமூக உறுப்பினர் ஒருவர் தாங்கள் உணவுக்காக யாரையும் கையேந்தும் நிலையில் இல்லை என்றும் 350 குடும்பங்கள் பசியோடு இருக்கின்றன என்ற செய்தியும் முற்றிலும் தவறானது என்று கூறினார். மேலும் உள்ளூர் கவுன்சிலர் நரசிங் தாஸ் என்பவரை OpIndia தொடர்பு கொண்டு கேட்டபோது "இப்போது கூட நான் ரேஷன் விநியோகம் செய்து கொண்டு தான் இருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

"கொரோனா வைரஸ் இந்தியாவில் அனைத்து தட்டு மக்களையும் பாதித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் வாரணாசியில் பசியால் யாரும் இறக்கும் நிலையில் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கங்கையில் நீர்மட்டம் உயர்கிறது. அதனால் படகுகள் இயக்க முடியாமல் அல்லது குறைந்த நேரம் மட்டுமே இயக்க முடிகிறது. ஆனால் இது குடும்பங்களுக்கு பசிக்கு வழிவகுக்காது. இதுபோன்ற கடினமான காலங்களில் மக்களுக்கு உதவ எங்களின் சமூகம் ஒன்று சேர்கிறது, "என்று அவர் கூறினார்.

"பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த ஆறு வருடங்களில் வாரணாசியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் எங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கின்றது" என்று கவுன்சிலர் தெரிவித்தார்.

இதுபோல OpIndia மற்ற மக்களிடம் கேட்கும்போதும் இங்கு 350 குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் பசியுடன் தூங்குகிறது என்பதை அவர்கள் மறுத்தனர். ஆதிநாத் சாகினி என்ற படகோட்டி OpIndiaவிடம் நாங்கள் நிதி நெருக்கடியில் உள்ளோம் என்பது முற்றிலும் தவறான செய்தி என்று குறிப்பிட்டார்.

பா.ஜ.க தலைவர் நவீன் கபூர், பகத் நிஷத் என்ற மற்றொரு படகோட்டியின் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். இதில் "இங்கு வசிக்கும் 350 குடும்பங்கள் ஊரடங்கின் போது நிதி நெருக்கடியில் தவிக்கிறோம், நாங்கள் பசியுடன் தினமும் உறங்க செல்கிறோம் என்பது முற்றிலும் தவறான செய்தி" என்று தெரிவித்தார். மேலும் பாபா விஸ்வநாத் மற்றும் மாதா அன்னபூர்ணா ஆகியோரால் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த நகரில் எந்த ஒரு உயிரினமும் பசியோடு உறங்காது என்று தெரிவித்தார்.

சரியான சமயத்தில் எங்களுக்கு உதவி கிடைத்தது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து ஒருவர் கூறுகையில் "ஊரடங்கின் போது சரியான நேரத்தில் எங்களுக்கு உதவி கிடைத்தது. எங்கள் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். அதேபோல் அவர் இந்த இக்கட்டான காலகட்டத்தில் எங்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முன்வந்தன. சமர்ப்பணம் அறக்கட்டளையின் நிறுவனர் பியூஷ் வாரணாசியில் உள்ள படகோட்டிகளை தாங்கள் ஏற்கனவே கவனித்து வருவதாக நடிகர் சோனு சூட்டுக்கு பதிலளித்தார். படகோட்டிகளின் குடும்பங்களுக்கு அவர்கள் அத்தியாவசிய மளிகை பொருட்களை வழங்கியதாகவும், ஏமாற்று வேலையில் ஈடுபடும் சிலர் இதுபோன்ற கருத்துக்களை கூறி இருக்கக்கூடும் என்றும் "நீங்கள் உதவி செய்வதற்கு முன் அவை உண்மைதானா என்று சரிபார்த்து உதவி செய்யுங்கள்" என்று நடிகருக்கு அந்த தன்னார்வு நிறுவனம் தெரிவித்தது.

Next Story