Top
undefined
Begin typing your search above and press return to search.

ஊழியர்களுக்கு 30 சதவீதம் சம்பளம் பிடிப்பு என்று பொய் செய்தி வெளியிட்ட டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் முகத்திரையை கிழித்த மத்திய அமைச்சர்.!

ஊழியர்களுக்கு 30 சதவீதம் சம்பளம் பிடிப்பு என்று பொய் செய்தி வெளியிட்ட டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் முகத்திரையை கிழித்த மத்திய அமைச்சர்.!

V.ThangavelBy : V.Thangavel

  |  12 May 2020 4:53 AM GMT

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த சமயத்தில் மத்திய அரசு ஊழியர்கள் பலர் வீடுகளில் இருந்தனர். அத்தியாவசிய பணி செய்யும் ஊழியர்களை தவிர மற்றவர்கள் பணிக்கு வரவில்லை.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தனர். இதனால் பணி செய்யவில்லை என்று 30 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி பொய் செய்தி வெளியிட்டது.


இந்த செய்திக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் மறுப்பு தெரிவித்து, உண்மை நிலவரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கான எந்த ஒரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. எனவே ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இது போன்று பொய் செய்திகளை பல ஊடகங்கள் வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்துள்ளது.

Next Story