Top
undefined
Begin typing your search above and press return to search.

புலம்பெயரும் தொழிலாளர்களை மீண்டும் யமுனை ஆற்றை கடந்து வர சொல்லி சினிமா ஷூட்டிங் போல படம் எடுத்த NDTV - அதிர்ச்சி தகவல்கள்.!

புலம்பெயரும் தொழிலாளர்களை மீண்டும் யமுனை ஆற்றை கடந்து வர சொல்லி சினிமா ஷூட்டிங் போல படம் எடுத்த NDTV - அதிர்ச்சி தகவல்கள்.!

R SubbaiahBy : R Subbaiah

  |  17 May 2020 3:12 AM GMT

பிரதமர் மோடி அரசு மீது பரபரப்பாக ஏதாகினும் புகார் செய்தி அளிக்க ஒவ்வொரு பத்திரிக்கையும் துடிக்கின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் என்பார்கள். இந்த பயமோ அல்லது மடியில் கனமோ ஆளும்தரப்பில் எவரிடமும் இல்லை. இதனால் பரபரப்பான புகார்களுக்கு வறட்சி ஏற்பட்டு செயற்கையாக செய்திகளை தயாரிக்கும் முயற்சிகளில் ஊடகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

உதாரணமாக பிரபல என்.டி.டி.வி வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் கணக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது, அதில் ஹரியானாவின் கலானூரிலிருந்து உத்தரபிரதேசத்தின் சஹரன்பூருக்குள் வந்து கொண்டிருக்கும் ஒரு 'புலம்பெயர்ந்த தொழிலாளி' யமுனா நதியைக் கடந்து மறு கரைக்கு வந்து விட்டார். இதை பார்த்த என்.டி.டி.வி பத்திரிக்கையாளர் அந்த தொழிலாளியை மீண்டும் அந்த கரைக்கு அனுப்பி அவரை திரும்பி வர சொல்லி அவர் நடப்பதை வீடியோ காட்சி எடுத்தார்,

அப்போது இப்படி வா.. அப்படி நட.. முகத்தை கொஞ்சம் காட்டு என கூறியபடி ஒரு சினிமா படக்காட்சி போல எடுத்தது பார்ப்பவர்கள் முகத்தை நெருட செய்தது. 2 விநாடி காட்சிக்காக அந்த தொழிலாளியை ஒரு அரை மணிநேரத்துக்கு பாடாய் படுத்தினார். இந்த அளவிற்கா ஊடகங்கள் தரம் தாழ்ந்து விட்டன என்று நினைக்கும்படி ஆனது. இதை பார்த்த சில நெட்டிசன்கள் இதையும் படம் பிடித்து 'பத்திரிக்கையாளர்களின் உணர்வற்ற தன்மை' என தலைப்பிட்டு சமூக ஊடகங்களில் பரப்பினர்.

தொலைக்காட்சி பதிவு செய்த அந்த போலி காட்சியும் சில மணிநேரங்களில் சில எடிட்டிங் பணிகள் செய்யப்பட்டு இயல்பானது போல காட்டப்பட்டது.

ஊடகங்களே 'செய்திகளை உருவாக்குதல்'

கடந்த ஆண்டு ஜனவரியில், இந்தியா டுடே பத்திரிகையாளர், கட்சியில் இருந்து பிரிந்து போன காங்கிரசார் மீண்டும் தங்கள் தாய்

கட்சியில் சேரும் பிரியங்கா காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை படம் பிடித்தார். அப்போது அந்த கூட்டத்துக்கு வந்தவர்களை உற்சாகமாக தோன்றும்படியும், அதிக கூட்டம் சேர்ந்த மாதிரியும் படம் பிடிப்பதற்காக அங்கு வந்தவர்களை வழிபடுத்திக் கொண்டிருந்தார். அதே போல அங்கு வந்தவர்களை முழக்கமிடுவற்கும், கோஷம் போடுவதற்கும் ஒத்திகை பார்த்தார் என கூறப்பட்டது.

அண்மையில், உஜ்ஜைனை தளமாகக் கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனம், சாலையில் வேண்டும் என்றே தானியங்களை பரப்பி 10 வயது சிறுமியை விட்டு அந்த தானியங்களை சேகரிக்க சொன்னது. அதை வீடியோ படம் பிடித்து பசி தாங்கமுடியாமல் ஏழை சிறுமி கீழே கிடக்கும் தானியங்களை எடுத்து தின்பதாக கூறி அந்த நிறுவனம் படத்தை பத்திரிக்கைகளிடம் கொடுத்து பிரசுரித்தது. இது குறித்து அந்த சிறுமியின் தாயார் கூறுகையில் " காமிராமேன் பணம் கொடுத்து ஒரு காட்சிக்காக தன் மகளை சாலையில் அவரால் பரப்பப்பட்ட தானியங்களை பொறுக்குமாறு சொல்லி படம் எடுத்ததாக" கூறினார்.

அதேபோல 2 மாதங்களுக்கு முன்னால் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் பஞ்சம் தலை விரித்தாடுவதாக ஒரு பொய் காட்சியை நேஷனல் ஹெரால்டு பத்திரிகை உருவாக்கியது. இதற்காக வாரணாசி அருகே உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்ற அவர்கள் அனுப்பிய உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் நிலத்திலிருந்து ஒரு வகை பருப்பு செடியை பிடுங்கி அதில் உள்ள பருப்புகளை சாப்பிட்ட குழந்தைகளை தூரத்தில் நின்று படம் பிடித்தது.

அதை பத்திரிகையில் வெளியிட்டு பிரதமரின் வாரணாசி தொகுதியில் பசி தாங்காமல் குழந்தைகள் புல் சாப்பிடுவதாக செய்திகள் வெளியிட்டனர். இது பொய்யான செய்தி என்றும் குழந்தைகள் கோதுமை அறுவடையான நிலத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகையான பருப்பு செடி அது என்றும் அதை நான் கூட சிறு வயதில் கிராமங்களில் சாப்பிட்டிருப்பதாக ஆதாரபூர்வ படங்களுடன் மாவட்ட கலெக்டர் கூறியதுடன் அந்த பத்திரிக்கைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story