Top
undefined
Begin typing your search above and press return to search.

புலம்பெயர் தொழிலாளர்களை நடக்க விட்டதாக தமிழக அரசை சாடிய RK ராதாகிருஷ்ணன், கேரளாவில் இருந்த வந்தவர்கள் என தெரிந்தபின் கப்சிப் - காற்றில் பறக்கும் ஊடக அறம்!

புலம்பெயர் தொழிலாளர்களை நடக்க விட்டதாக தமிழக அரசை சாடிய RK ராதாகிருஷ்ணன், கேரளாவில் இருந்த வந்தவர்கள் என தெரிந்தபின் கப்சிப் - காற்றில் பறக்கும் ஊடக அறம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 May 2020 2:37 PM GMT

பத்திரிக்கையாளர் என்ற பெயரில் உலா வருபவர் RK ராதாகிருஷ்ணன். இவரின் நேர்மை ஹிந்து குழுமத்தின் மாலினி பார்த்தசாரதியால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது ஒரு காலத்தில், பல சீனியர் பத்திரிக்கையாளர்கள் இருந்த போதும், எந்த தகுதியும் இல்லாத இவர் அக்காலத்தில் சென்னையில் இருந்து டெல்லி பறந்து அ.ராசாவை பேட்டி எடுத்தார். இதற்கு பின்னனியில் அரசியல் சார்பு உள்ளதாக இன்று வரை சொல்லப்படுகிறது. ஊடக விவாதங்களில் தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஊதுகுழலாக செயல்பட்டு வருபவர் இவர். நித்தமும் பா.ஜ.க எதிர்ப்பு பிரச்சாரங்களை சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் உச்சபட்ச பாரபட்சத்துடன் வெளிப்படுத்தி பத்திரிக்கை துறைக்கே ஒரு இழுக்காக விளங்கிக் கொண்டு இருக்கிறார் என ஊடகத்துறையினரே சொல்லி புலம்பி வருகின்றனர்.

திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர் என திருப்பூர் கலெக்டர் விஜய் கார்த்திகேயனை டேக் செய்து ஒரு பதிவு செய்கிறார். அதில் தமிழக அரசை மட்டம் தட்டும் எப்போதும் போன்ற தொனியில் ட்வீட் செய்து இருப்பது மட்டுமின்றி உச்சபட்ச அறச்சீற்றமும், போதனைகளும் இடம் பெறுகிறது.

அதற்கு திருப்பூர் கலெக்டர் இவர்கள் கேரளாவில் இருந்து ட்ரக் மூலம் பதுங்கி திருப்பூர் வந்துள்ளனர், அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் என பதிவிட்டார்.

அதற்கு பத்திரிக்கையாளர் என சொல்லிக் கொள்பவர் "Good work. Thank you" என்று மட்டும் பதிவிட்டு லாவகாம வெளியேறி உள்ளார். தமிழக அரசை இதில் குறை சொல்ல முடியவில்லையே என அவரின் மனக்குமுறல் இந்த ட்வீட்டில் அப்பட்டமாக பதிவாகி உள்ளது.

கேரளாவில் இருந்து வேறு வழியின்றி தப்பித்து வந்ததற்கு கேரள அரசு காரணமென்பதால் கேரளாவின் கையாலாகததனத்தை பற்றி விமர்சித்து இருக்க வேண்டாமா? அது உண்மையான, நேர்மையான, அப்பழுக்கற்ற பத்திரிக்கையாளர்கள் செய்வது. ஆனால், பத்திரிக்கையாளர் பெயரில் இழி செயல் செய்யும் ஒருவர் அவ்வாறு நடந்துக் கொள்ள மாட்டார் என ராதாகிருஷ்ணனை வெளுத்து வாங்கினர் ட்விட்டர்வாசிகள்.

இது போன்ற நேர்மை இல்லாமல், அஜெண்டாவுடன் செயல்படும் போலி பத்திரிக்கையாளர்கள் இருக்கும் வரை பத்திரிக்கை துறைக்கு இழுக்கு தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Next Story