Top
undefined
Begin typing your search above and press return to search.

இது விகடன் கும்பலின் வன்னியபோபியா! #VanniyaPhobia

இது விகடன் கும்பலின் வன்னியபோபியா! #VanniyaPhobia

Arjunan IlayarajaBy : Arjunan Ilayaraja

  |  14 May 2020 4:35 PM GMT

இது விகடன் கும்பலின் வன்னியபோபியா!

எந்தவொரு நிகழ்விலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சாதகமான செய்தி வெளிவரவே கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருப்பது ஆனந்த விகடன் கும்பலின் சாதிவெறி நிலைப்பாடு ஆகும்.

தற்போது வெளியாகியுள்ள ஜூனியர் விகடன் இதழில் - தலித் எழில்மலை அவர்களின் மறைவு குறித்து ஒரு பக்க கட்டுரை வெளியிட்டுள்ளார்கள்.

அதில் மிகவும் வன்மமாக

1. "பா.ம.க-வில் இருந்த போதும் அம்பேத்கரிய கருத்துகளில் தீவிரமாக இருந்தார் தலித் எழில்மலை" என்றும்

2. "தாம்பரம் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அயோத்திதாசர் பெயரைச் சூட்டுவதற்கு அவர்தான் காரணம்" என்றும் எழுதியுள்ளது விகடன் சாதிவெறி கும்பல்!

உண்மை என்ன?

1. பா.ம.க-வின் முப்பெரும் வழிகாட்டிகளில் அண்ணல் அம்பேத்கர் ஒருவர். தைலாபுரம் பா.ம.க பயிலரங்கில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் கார்ல் மார்க்ஸ் ஆகியோருக்கு சிலை உள்ளது.

எனவே, "பா.ம.க-வில் இருந்த போதும் அம்பேத்கரிய கருத்துகளில் தீவிரமாக இருந்தார்" என்று இரண்டையும் எதிரெதிராக பிரித்துக் காட்டுவது விஷமமான சாதிவெறி புத்தி ஆகும்.

2. தாம்பரம் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு 1999-ல் அனுமதி அளித்தவர் பா.ம.க அமைச்சராக இருந்த தலித் எழில்மலை. ஆனால், 2005-ஆம் ஆண்டில் அந்த அதனை திறந்து வைத்தவரும் அயோத்திதாசர் பெயரைச் சூட்டியவரும் அப்போதைய இந்திய சுகாதார அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் ஆகும். அயோத்திதாசர் பெயரைச் சூட்டியவர் ஒரு வன்னியர் என்று வரலாற்றில் இருக்கக் கூடாது என விஷமமாக உண்மையை திரித்து எழுதியுள்ளது சாதிவெறி விகடன் கும்பல்.

வன்னியபோபியா மனநோய் பீடித்த விகடன் கும்பல்

'கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல' எஸ்.எஸ்.வாசன் தொடங்கிய விகடன் பத்திரிகை குழுமம் இப்போது 80% ஒரே சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் அனைவரும் ஒற்றை சாதி மற்றும் ஒற்றை சாதிவெறி கட்சியை சேர்ந்தவர்கள் ஆகும். சாதிவெறி பிடித்த இந்த புதிய கூட்டம், பா.ம.க மீது வன்மத்தை கொட்டுவதில் வியப்பதற்கு எதுவும் இல்லை.

பா.ம.க-வின் தலைமைப் பொறுப்பில் வன்னியர்கள் இருப்பதால், பா.ம.க-வை வன்மத்தோடு தாக்குகிறது விகடனை ஆக்கிரமித்துள்ள இந்த சாதிவெறி கும்பல்.

தமிழக ஊடகங்களை இதற்கு முன்பு கட்டுப்பாட்டில் வைத்திருந்த பழைய கூட்டம் ஒட்டுமொத்தமாக தமிழர்களை எதிர்க்கும் வகையில் செய்திகளை வெளியிடுவார்கள்.

ஆனால், புதிய கூட்டத்தின் நோக்கம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் மீது 'எதிர்க்கலகம்' என்கிற பெயரில் இனவெறி வன்முறைக்கான சூழலை தமிழ்நாட்டில் உருவாக்குவதாகும். இவர்கள் மிகவும் குறிப்பாக வன்னியர்கள் மீது குறி வைக்கின்றனர்.

இவர்களின் எதிர்க்கலக தாக்குதலில் ஒரு அங்கம் தான் - ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ள வெறுப்பு செய்தி ஆகும்.

குறிப்புகள்:

1. எதிர்க்கலகம் என்றால் என்ன?

எதிர்க்கலகம்: ஒரு சமுதாயத்தை பிரதிநிதத்துவப் படுத்துவதாக கூறிக்கொள்ளும், ஆனால், அந்த சமுதாயத்தின் நலனில் சிறிதளவும் அக்கறையில்லாத - தம்மிடம் மட்டுமே "சரக்கும், மிடுக்கும்" இருப்பதாகக் கூறிக்கொள்ளும் - ஒரு வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் "எதிர்க்கலகம்" என்கிற சித்தாந்தத்தை உருவாக்கியுள்ளனர்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்கள் மீது, படுகொலை நோக்கிலும், பண்பாட்டு ரீதியாக, பொருளாதார ரீதியாக, மனோவியல் ரீதியாகவும் திட்டமிட்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்பது இந்த வன்முறை கும்பலின் 'எதிர்க்கலக' முன்னெடுப்பு ஆகும்.

'ஒருகாலத்தில் உங்களது முன்னோர்களால் நாங்கள் ஒடுக்கப்பட்டிருந்தோம். எனவே, அதற்கு பதிலடியாக இப்போது நாங்கள் உங்களை தாக்குகிறோம். இதுதான் நீதி, இதுதான் நியாயம். எங்களது தாக்குதலை நீங்கள் மனமுவந்து ஏற்க வேண்டும்.

உங்களது உடைமைகள், உரிமைகள், பெண்கள் என எல்லாவற்றையும் எங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்' - என்பது இவர்கள் வைக்கும் வரலாற்று ரீதியான எதிர்க்கலக நியாயம் ஆகும்.

2. வன்னியபோபியா என்றால் என்ன?

#VANNIYAPHOBIA - "is prejudice, hatred of, or discrimination against Vanniyars"

வன்னியர்கள் மீதான தேவையற்ற வெறுப்புணர்வு, அச்சம், தப்பெண்ணம், ஓரவஞ்சனை உள்ளிட்டவற்றை வன்னியபோபியா என வரையறுக்கலாம்.

தமிழ்நாட்டில் வன்னியர் என்கிற ஒரு சமூகம் இருக்கவே கூடாது, அவர்களை எல்லா வகைகளிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற இனவெறியாக இது வெளிப்படுகிறது.

தமிழகத்தில் குறிப்பிட்ட சிலருக்கு இந்த வன்னியபோபியா மனநோய் பிடித்துள்ளது. இவர்களிடம் பணம், ஊடகம், அதிகாரம் எல்லாமும் இருக்கிறது. அதனால், தொற்றுநோய்ப் போன்று, 'வன்னியரல்லாதோரிடம்' ஒரு பொதுவான 'வன்னியர் எதிர்ப்பு மனநிலையை' பரப்பி வைத்துள்ளனர். வன்னியர்கள் குறித்த எல்லாவிதமான கட்டுக்கதைகளுக்கும் அவதூறுகளுக்கும் இந்த மனநோய் தான் காரணம் ஆகும்.

ஒரு இனத்துக்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் 'இனவெறியின் ஒரு வடிவம்' ஆகும். யூதர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ANTISEMITISM என்றும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ISLAMOPHOBIA என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

அதே போன்று வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது VANNIYAPHOBIA எனக் கூறலாம். மனித உரிமைகள் கோட்பாடுகளின் படி இவற்றை "racism, racial discrimination, xenophobia and related forms of intolerance" என அழைக்கிறார்கள்.

பின்குறிப்பு: இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் எழுத்தாளரை மட்டுமே சேரும்.

Next Story