Top
undefined
Begin typing your search above and press return to search.

சொந்த வீட்டில் கிருஸ்துவ பிரார்த்தனை நடத்தி கொரோனா பரவியதை, கோவிலில் நடந்ததாக சித்தரிக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா - முகத்திரை கிழிந்தது!

சொந்த வீட்டில் கிருஸ்துவ பிரார்த்தனை நடத்தி கொரோனா பரவியதை, கோவிலில் நடந்ததாக சித்தரிக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா - முகத்திரை கிழிந்தது!

MuruganandhamBy : Muruganandham

  |  3 May 2020 4:45 AM GMT

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், சென்னையின் திரு வி கா நகர் மண்டலத்தில் உள்ள ஒரு குடும்பம் தங்கள் சொந்த கட்டிடத்தின் தரை தளத்தில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தியது. அவர்களில் பதினைந்து பேருக்கு ஏப்ரல் 26 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்த குடும்ப உறுப்பினர்கள் மூன்று மாடி கட்டிடத்தின் வெவ்வேறு தளங்களில் வசிக்கின்றனர். மேலும் பிரார்த்தனைக் கூட்டம் சமீபத்தில் தரை தளத்தில் நடைபெற்றது. கார்ப்பரேஷன் அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர்களில் ஒரு குடும்பம் சுகாதாரத் தொழிலாளர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

"கூட்டத்தில் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் இருந்தார்களா என்பது குறித்து இன்னும் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன" என்று ஒரு கார்ப்பரேஷன் அதிகாரி கூறினார்.

இந்த நிலையில் இதுகுறித்த செய்தி வெளியிடும் போது, பிரார்த்தனை கூட்டம் நடந்ததாக கூறி, கபாலீஸ்வரர் கோவிலின் முகப்பு பகுதியை காட்டி, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு கோவிலில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது என்று வலியுறுத்துவதன் மூலம் வாசகர்களைக் குழப்புகிறது.





இதற்கிடையில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 26 அன்று குடும்பம் வசித்து வந்த தனியார் கட்டிடத்தின் தரை தளத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அதே சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.

கொரோனா பாதித்த குடும்ப உறுப்பினர்கள் சொந்த வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்திய நிலையில், கட்டுரையில் கோவிலின் படத்தை டைம்ஸ் ஆப் இந்தியா பயன்படுத்தும் போது, வாசகருக்கு அந்த பிரார்த்தனைக் கூட்டம் கோவிலில் நடைபெற்றது என்று நினைக்க தோன்றும். இப்படி பல விவகாரங்களில் போலி தகவல் பரப்பிய வரலாற்றை கொண்டுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா.


Next Story