Top
undefined
Begin typing your search above and press return to search.

81 %-யை விட 39 % அதிகமாம் - பா.ஜகவிற்கு எதிராக விஷமத்தை கக்கி போலி செய்தி பரப்பும் NDTV!

81 %-யை விட 39 % அதிகமாம் - பா.ஜகவிற்கு எதிராக விஷமத்தை கக்கி போலி செய்தி பரப்பும் NDTV!

MuruganandhamBy : Muruganandham

  |  15 Feb 2020 8:23 AM GMT

தீவிர இடதுசாரி போலி செய்தி வலைத்தளமான என்.டி.டி.வி வியாழக்கிழமை மீண்டும் பிடிபட்டது. பி.ஜே.பி மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது குற்றவியல் குற்றச்சாட்டுக்களுடன் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது என்று கூறி செய்தி வெளியிட்டுள்ளது.

வியாழக்கிழமை, அரசியல் குற்றவாளிகள் குறித்து உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு தொடர்பாக என்.டி.டி.வி ஒரு விவாதத்தை நடத்தியது. விஷ்ணு சோம் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில், பாஜக மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது குற்றவியல் குற்றச்சாட்டுக்களைக் கொண்ட எம்.பி.க்களை அதிகம் கொண்டுள்ளதாக சித்தரிக்க ஒரு விளக்கப்படத்தைக் காட்டியது.

என்.டி.டி.வி வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில், பாஜக, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட ஐந்து அரசியல் கட்சிகளிடையே ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதில் சுவாரஸ்யமாக, ஐந்து கட்சிகளிலும், பாஜகவில் மட்டுமே மிகக் குறைந்த சதவீத எம்.பி.க்கள், அதாவது 39 சதவீதம் குற்றவியல் குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ளனர். ஜனதா தளம் கட்சியில் 81 சதவீத எம்.பி.க்கள் குற்றப் பதிவுகளுடன் உள்ளனர்.

இருப்பினும், என்.டி.டி.வி, வழக்கம் போல், பாஜகவின் வரைபடத்தை மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது அதிகம் உள்ளது போல காட்டியது.

அதே வரைபடத்தில், காங்கிரஸ், டி.எம்.கே, ஜே.டி.யு மற்றும் டி.எம்.சி ஆகியவற்றை முறையே 57 சதவீதம், 43 சதவீதம், 81 சதவீதம் மற்றும் 41 என சித்தரிக்கப்பட்டு குறைவாக காண்பிக்கப்பட்ட நிலையில், வெறும் 39 சதவிகிதம் உள்ள பாஜகவை அதிகம் உள்ளது போல காண்பித்துள்ளனர்.

சமமற்ற வரைபடங்களுடன் புள்ளிவிவரங்களைக் காண்பிப்பதன் மூலம், ஐந்து கட்சிகளிடையேயும் குற்றவியல் பதிவுகளைக் கொண்ட அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களை பாஜக கொண்டுள்ளது என்பதை பொய்யாக சித்தரிதுள்ளனர்.





Next Story