Top
undefined
Begin typing your search above and press return to search.

'இந்தியா டுடே' குழும சேனல் மன்னிப்புக் கேட்டு, அபராதம் செலுத்த வேண்டும் - NBSA உத்தரவு.!

இந்தியா டுடே குழும சேனல் மன்னிப்புக் கேட்டு, அபராதம் செலுத்த வேண்டும் - NBSA உத்தரவு.!

Saffron MomBy : Saffron Mom

  |  8 Oct 2020 11:09 AM GMT

கடந்த ஜூன் மாதத்தில் 'தற்கொலை' செய்து கொண்டு இறந்ததாகக் கூறப்படும் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தொடர்பான போலி ட்வீட்களை ஒளிபரப்பியதற்காக இந்தியா டுடே குழுமத்தின் இந்தி மொழி செய்தி சேனலான ஆஜ்தாக் மீது செய்தி ஒளிபரப்பு தர ஆணையம் (NBSA) ரூ .1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ' மறைந்த நடிகரது ட்விட்கள் எனக் கூறி போலி ட்வீட்களை ஒளிபரப்புவதற்கு முன்னர் தேவையான சரிபார்த்தல் செய்யப்படவில்லை' என்று மன்னிப்புக் கேட்டு அதை தங்கள் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்புமாறு உத்தரவிட்டுள்ளது. மன்னிப்பின் சாரம்சம், உரை, தேதி மற்றும் நேரம் ஒளிபரப்பாளருக்கு முன்னரே வழங்கப்படும்.

மன்னிப்பு கேட்டு அது ஒளிபரப்பப்பட்டதற்கான ஆதாரத்தை, ஒளிபரப்பப்பட்ட 7 நாட்களுக்குள் ஒளிபரப்பு தர ஆணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு அது ஆஜ்தக்கைக் கேட்டுள்ளது. மேலும் உத்தரவு கிடைத்த 7 நாட்களுக்குள் அபராதம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.



இந்தியா டுடே குழுமத்தின் ஆஜ் தக் சானல், அண்மையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தொடர்பான இதுபோன்ற பல போலி செய்திகளை பரப்பியுள்ளது. ஜூன் 16 அன்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து கிடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது "கடைசி ட்வீட்டுகள்" குறித்து அது ஒரு விரிவான செய்தியை வெளியிட்டது. ஆஜ் தக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து கட்டுரையை ட்வீட் செய்திருந்தது. மறைந்த நடிகர் தனது உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக முன்கூட்டியே குறிப்புகள் அளித்ததாகக் கூறப்படும் இந்த "ட்வீட்கள்" அடங்கிய கட்டுரையை பகிர்ந்து கொண்ட ட்வீட் பின்னர் நீக்கப்பட்டது. ஆஜ் தக் பின்னர் அந்தக் கட்டுரையையும் தெளிவுபடுத்தாமல் நீக்கி விட்டது.



அந்த ட்விட்களின் வீடியோக்களை ஒளிபரப்பி இருந்தால், அதன் வலைத்தளம், யூடியூப் அல்லது பிற இணைப்புகளிலிருந்து அவற்றை உடனடியாக அகற்றி, 7 நாட்களுக்குள் NBSAக்கு உறுதிப்படுத்துமாறு ஆஜ்தாக்கிற்கு உத்தரவிட்டுள்ளது.

நியூஸ்ட்ராக்லைவ்.காம், இந்தியா.காம், நியூஸ் 4 நேஷன்.காம் மற்றும் பல வலைத்தளங்கள் ஆஜ்தாக் சொன்ன அதே செய்திகளை எடுத்துக் கூறியன. Newstracklive.com அதன் அறிக்கையை பின்னர் நீக்கியது. இந்தியா.காம் அதே செய்தியை, உண்மைச் சரிபார்ப்பு கட்டுரையாக மாற்றியது.

மேலும், ஆஜ்தாக் மற்றும் இந்தியா டிவி போன்ற சேனல்களும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சடலப் படங்களை சமூக ஊடகங்களில் வைரலாக்கி விட்டன. தற்கொலைக் கோட்பாட்டைத் தூண்டுவதற்காக இந்த வைரல் படங்கள் போட்டோ சாப் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆஜ்தாக் மற்றும் இந்தியா டிவி செய்தி போன்ற சேனல்கள் மேற்கூறிய வழிகாட்டுதல்களை மீறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று NBSA முடிவு செய்தது.

மருத்துவ ரீதியாக உரிமம் பெறாத ஒரு சிகிச்சையாளரின் கசிந்த அறிக்கையின் அடிப்படையில் இந்தியா டுடே முன்பு சுஷாந்தை மனநலம் பாதித்த நபராக சித்தரிக்க முயன்றது. மேலும், இந்தியா டுடேயின் ராஜ்தீப் சர்தேசாய் நடிகரின் மரண வழக்கில் பிரதான சந்தேகநபரான ரியா சக்ரவர்த்தியையும் பேட்டி கண்டார். இந்த நேர்காணல் இந்தி செய்தி சேனலான ஆஜ்தக்கில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நேர்காணல் பரவலாக கண்டிக்கப்பட்டது மற்றும் இந்த வழக்கில் ஒரு சந்தேக நபருடன் ஒரு நேர்காணலை நடத்தியதன் மூலம் ரியா மீதான குற்றச்சாட்டுகளின் மீது வெள்ளையடிக்க முயன்றதாக சர்தேசாய் விமர்சிக்கப்பட்டார்.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆஜ்தாக், ஜீ நியூஸ் மற்றும் நியூஸ் 24 ஒளிபரப்பாளர்களை மன்னிப்பு கேட்டு அதை ஒளிபரப்புமாறு கேட்க NBSA முடிவு செய்துள்ளது.

Next Story