Top
undefined
Begin typing your search above and press return to search.

சுஷாந்த் வழக்கில் "கொலைக் கோணம் இல்லை" என்ற இந்தியா டுடேவின் கட்டுரையை மறுத்து CBI அறிக்கை வெளியீடு.!

சுஷாந்த் வழக்கில் கொலைக் கோணம் இல்லை என்ற இந்தியா டுடேவின் கட்டுரையை மறுத்து CBI அறிக்கை வெளியீடு.!

JananiBy : Janani

  |  4 Sep 2020 7:42 AM GMT

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் "கொலை கோணம் இல்லை" என்று மூன்று CBI தலைமையிலான அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செவ்வாய்க்கிழமை அன்று செய்திக் கட்டுரையை வெளியிட்டது. இந்த அறிக்கையை மத்திய புலனாய்வுத் துறை(CBI) முற்றிலும் மறுத்து வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

செவ்வாயன்று இந்தியா டுடே வெளியிட்ட கட்டுரையில், "சுஷாந்த் கொலை வழக்கில் எந்த விதமான ஆதாரமும், தடயமும் குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கவில்லை எனவே அது கொலை வழக்கு போல தெரியவில்லை. மேலும் இந்த வழக்கைக் கொலை முயற்சி இல்லை என்று முடித்து விடாமல் தற்கொலைக்குத் தூண்டுதல் கோணத்தில் ஆராய்ந்து வருவதாகவும் CBI அதிகாரிகள் கூறியுள்ளனர்," என்று கட்டுரையில் இந்தியா டுடே தெரிவித்திருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, CBI விசாரணை குறித்துக் கூறிய சில ஊடகங்களின் செய்திகள் உண்மையல்ல. விசாரணை தொடர்பாக "எந்த விவரங்களையும் நாங்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கவில்லை," என்று மத்திய புலனாய்வு அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. CBI விசாரணை குழுவினரோ, செய்தி தொடர்பாளரோ எந்த விவரங்களையும் ஊடகத்துக்குத் தெரிவிக்கவில்லை, CBI -ஐ மேற்கோள்காட்டிக் கூறுவதற்கு முன்பு CBI செய்தி தொடர்பாளர்களிடம் உறுதிப்படுத்துமாறு ஊடகங்களுக்கு CBI வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக சுஷாந்த் வழக்கில் ரியா சக்ரவர்த்தியின் குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கும் விதமாக சுஷாந்த் "மன நோயால் பாதிக்கப்பட்டவர்" என்பதை மேற்கோள்காட்டிக் கூறும் வகையில் ரியாவுடனான நேர்காணல் ஒன்றையும் இந்தியா டுடே வெளியிட்டது. மேலும் ரியா "பள்ளிப்பருவத்தில் சிறந்த மாணவி" என்ற செய்திக் கட்டுரையும் வெளியிட்டது. இதற்கும் வழக்குக்கும் சம்பந்தமில்லை என்றாலும் குற்றம்சாட்டப்பட்டவர் மேல் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

Next Story