Top
undefined
Begin typing your search above and press return to search.

NSA அஜித் டோவல் கூறியதாக சீன ஊடகங்கள் வெளியிட்ட கருத்துகள் 'முற்றிலும் தவறானவை' - வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை.!

NSA  அஜித் டோவல் கூறியதாக சீன ஊடகங்கள் வெளியிட்ட கருத்துகள்

JananiBy : Janani

  |  8 Sep 2020 3:44 PM GMT

சீன ஊடகங்கள், இந்திய பாதுகாப்புத் துறை ஆலசோகர் (NSA) அஜித் டோவல் கூறியதாக வெளியிட்ட கருத்துக்கள் தவறானவை என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாயன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. சீன அரசின் ஊதுகுழலான குளோபல் டைம்ஸ் உள்ளிட்ட சீன ஊடகங்களில் இவை வெளியானது. இது போன்ற யூக செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் இந்திய ராணுவம், கிழக்கு லடாக்கில் உண்மை எல்லைக் கோட்டை தாண்டி விட்டதாக சீனா எழுப்பிய குற்றச்சாட்டையும் இந்திய இராணுவம் மறுத்து, உண்மையில் தாங்கள் மீறவில்லை என்பதனையும் குறிப்பிட்டுள்ளது. செப்டம்பர் 7 இரவில் கிழக்கு லடாக்கில் பாங்கோங் ஏரியைக் கடந்து இந்திய இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக PLA குற்றம்சாட்டியிருந்தது.

"ஆனால் உண்மையில் சீன இராணுவம் தான், கட்டுப்பாட்டுக் கோட்டை நெருங்கி வந்து காற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தித் தனது சொந்த ராணுவத்தை அச்சுறுத்தியது" என்று இந்திய ராணுவம் PLA குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. எந்த நிலையிலும் கட்டுப்பாட்டுக் கோட்டினை தாண்டிவந்து இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடோ அல்லது எந்தவித அச்சுறுத்துதல்களையும் ஏற்படுத்தவில்லை என்பதனையும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் PLA வின் வெஸ்டர்ன் கமாண்டர் வெளியிட்ட அறிக்கைகள், சர்வதேச நாடுகளைத் தவறான பாதையில் வழிநடத்துவது போன்று உள்ளது என்பதனையும் இராணுவம் தெரிவித்துள்ளது. "மேலும் இந்திய இராணுவம் அமைதியைக் காத்துவந்தாலும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் காப்பதிலும் தவறாது," என்று இராணுவம் திட்ட வட்டமாகக் கூறியுள்ளது.

Image Credits : The Better India

Next Story