Top
undefined
Begin typing your search above and press return to search.

2017 புகைப்படத்தை வைத்து போலி செய்தி : பா.ஜ.க-வை டார்கெட் செய்ய முயற்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மூக்குடைந்த பின்னணி!

2017 புகைப்படத்தை வைத்து போலி செய்தி : பா.ஜ.க-வை டார்கெட் செய்ய முயற்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் மூக்குடைந்த பின்னணி!

MuruganandhamBy : Muruganandham

  |  6 Jun 2020 12:38 PM GMT

பழைய புகைப்படத்தை வெளியிட்டு, வதந்தி பரப்பிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், சமூக ஊடக பயனர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை அர்ச்சனா டால்மியா, கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பழைய படத்தை பகிர்ந்து, அது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அந்தப் படத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் தாமோவில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்று கூறிய அவர், "தாய் இறந்துவிட்டார் என்பது தெரியாமல், தாயிடம் பால் குடிக்கிறது குழந்தை" என்று தெரிவித்திருந்தார்.


இந்த புகைப்படத்தின் உண்மை நிலை குறித்து பரிசோதனை செய்த, ஆர்.பி.எஃப், இது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் 2017 மே மாதத்தில் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

அந்தப்பெண் ஓடும் ரயிலில் இருந்து தற்செயலாக தவறி விழுந்து இறந்துள்ளார். உரிய செயல்முறைக்குப் பிறகு, இறந்த பெண்ணின் உடல் மற்றும் குழந்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் அர்ச்சனா டால்மியா கூறிய கூற்றுக்களை அனைத்தும் பொய் என்று கூறி, அவரது கருத்தை நிராகரித்துள்ளது ஆர்.பி.எஃப்.

பா.ஜ.க-வை குறிவைக்க வைப்பதாக நினைத்து பழைய படத்தை வைத்து வதந்தி பரப்பிய அர்ச்சனா டால்மியா, தன்னுடைய பதிவு போலி செய்தி என்பது தெரிந்தவுடன் அதனை நீக்கியுள்ளார்.

Next Story