Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லி கலவரத்தை விமர்சித்ததால் நீதிபதி மாற்றப்பட்டாரா? அப்பட்டமாக பரவும் போலி செய்தி : அம்பலமான ஆதாரம்!

டெல்லி கலவரத்தை விமர்சித்ததால் நீதிபதி மாற்றப்பட்டாரா? அப்பட்டமாக பரவும் போலி செய்தி : அம்பலமான ஆதாரம்!

MuruganandhamBy : Muruganandham

  |  27 Feb 2020 5:12 AM GMT

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்து பாஜகவினருக்கு எதிராக உத்தரவு பிறப்பத்ததால் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் முழுக்க முழுக்க இடதுசாரி அமைப்பினரால் திட்டமிட்டு பரப்பப்பட்ட போலி செய்தி என்பது தெரியவந்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 12 ஆம் தேதி கொலீஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று, நீதிபதி முரளிதர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்திய அரசியலமைப்பின் 222 வது பிரிவின் (1) வது பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி மற்றும் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தனது அலுவல பொறுப்பை ஏற்கும்படி அவருக்கு அறிவுறுத்துவதில் மகிழ்ச்சி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் உள்ள சில உண்மைகளை நாம் கவனிக்க வேண்டும்.

முதலாவது, உச்ச , உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமனம் செய்வது உச்ச நீதிமன்றத்தின் 5 மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம். அந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான அறிவிப்பை வெளியிடும்.

இரண்டாவது, டெல்லி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே நீதிபதி முரளிதரை பணியிட மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துவிட்டது. கொலிஜியத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அதற்கான அறிவிக்கையை தான் நேற்று வெளியிட்டுள்ளது.

மற்ற படி ஊடகங்களில் வெளிவருவதை போல, டெல்லி கலவரம் குறித்து விமர்சித்து பேசியதால் தான் மாற்றப்பட்டார் என்பது திட்டமிட்டே கட்டவிழ்த்து விடப்பட்ட போலி செய்தி. இது போராட்டம் எல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிப்ரவரி 12 ஆம் தேதியே எடுக்கப்பட்ட முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.





Next Story