Top
undefined
Begin typing your search above and press return to search.

தி.மு.க உ.பிஸ் கலக்கம்: பிரதமர் மோடியின் "மன் கி பாத்" வீடியோவிற்கு வந்த டிஸ்லைக்குகளில் 98% துருக்கியில் இருந்து வந்தது அம்பலம்!

தி.மு.க உ.பிஸ் கலக்கம்: பிரதமர் மோடியின் மன் கி பாத் வீடியோவிற்கு வந்த டிஸ்லைக்குகளில் 98% துருக்கியில் இருந்து வந்தது அம்பலம்!

MuruganandhamBy : Muruganandham

  |  2 Sep 2020 5:26 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் மக்களுடன் உரையாடும் 'மன் கி பாத் " நிகழ்வை மேற்கொள்வார். சில முக்கியமான நிகழ்வுகளைப் பற்றியும் அதில் உரையாடுவார்.

அந்த நிகழ்ச்சியின் 68-வது நிகழ்வைக் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது. அதில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், நோயின் தாக்கத்தால் நசுக்கப்பட்ட பொருளாதாரம், தமிழகத்தின் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ராஜபாளையம் நாட்டு நாய் வளர்ப்பு போன்ற பல தலைப்புகளில் அவர் உரையாடினார். இந்த காணொளியை பா.ஜ.க கட்சி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் வெளியிட்டது.

அந்த தளத்தை சுமார் முப்பது இலட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். எனினும் பதிவு செய்த காணொளியைப் பலர் பார்த்துள்ளனர். ஆனால் அந்த வீடியோவை இது வரை 75,000 பேர் மட்டுமே லைக் செய்துள்ள நிலையில் 5,30,000 பார்வையாளர்கள் டிஸ்லைக் (dislike) செய்துள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆராயும் போது, அந்த டிஸ்லைக்கில் (dislike) 2 சதவிகிதம் மட்டுமே இந்தியாவுக்குள் இருந்து தோன்றியதாகவும், 98 சதவீதம் வெளிநாட்டில் இருந்து மேற்கொள்ளப்பட்டவை என்று யூடியூபிலிருந்து வரும் தரவுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து பா.ஜ.க ஐ.டி பிரிவு தேசிய தலைவர் அமித் மாள்வியா கூறி இருப்பதாவது:

எனினும், இது குறித்த உறுதியான தகவல் ஏதும் யூடியூப் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

இந்த திட்டமிடப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் இருந்த துருக்கியின் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றின் பட்டியலை பின்வருமாறு காணலாம்.

மேற்கண்ட கணக்குகளில் உண்மையான பின்தொடர்பவர்கள் யாரும் இல்லை, அவர்கள் எந்த உண்மையான நபர்களையும் பின்பற்றுவதில்லை.

Next Story